• Guruvadithaamarai,  Maha Periyavaa

    Maha Periyava Ashtothram in Tamil

     

    ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதீச்வர ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி அஷ்டோத்தரசத நாமாவளி:

    1. ஓம் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதீச்வராய நம:
    2. ஓம் ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி குருப்யோ நம:
    3. ஓம் ஸன்யாஸாச்ரம சிகராய நம:
    4. ஓம் காஷாய தண்ட தாரிணே நம:
    5. ஓம் ஸர்வபீடாபஹாரிணே நம:
    6. ஓம் ஸ்வாமிநாத குரவே நம:
    7. ஓம் கருணாஸாகராய நம:
    8. ஓம் ஜகதாகர்ஷண சக்திமதே நம:
    9. ஓம் ஸர்வ சராசர ஹ்ருதயஸ்தாய நம:
    10. ஓம் பக்த பரிபாலக ச்ரேஷ்டாய நம:
    11. ஓம் தர்ம பரிபாலகாய நம:
    12. ஓம் ஸ்ரீ ஜயேந்த்ர ஸரஸ்வத்யாசார்யாய நம:
    13. ஓம் ஸ்ரீ விஜயேந்த்ர ஸரஸ்வதி பூஜிதாய நம:
    14. ஓம் சிவ சக்தி ஸ்வரூபகாய நம:
    15. ஓம் பக்த ஜன ப்ரியாய நம:
    16. ஓம் ப்ரம்ம விஷ்ணு சிவைக்ய ஸ்வரூபாய நம:
    17. ஓம் காஞ்சீ க்ஷேத்ர வாஸாய நம:
    18. ஓம் கைலாஸ சிகர வாஸாய நம:
    19. ஓம் ஸ்வதர்ம பரிபோஷ காய நம:
    20. ஓம் சாதுர் வர்ண்ய ரக்ஷகாய நம:
    21. ஓம் லோக ரக்ஷித ஸங்கல்பாய நம:
    22. ஓம் ப்ரஹ்ம நிஷ்டாபராய நம:
    23. ஓம் ஸர்வ பாப ஹராய நம:
    24. ஓம் தர்ம ரக்ஷக ஸந்துஷ்டாய நம:
    25. ஓம் பக்தார்ப்பி்த தன ஸ்வீகர்த்ரே நம:
    26. ஓம் ஸர்வோபநிஷத் ஸாரஞ்ஞாய நம:
    27. ஓம் ஸர்வ சாஸ்த்ர கம்யாய நம:
    28. ஓம் ஸர்வ லோக பிதாமஹாய நம:
    29. ஓம் பக்தாபீஷ்ட ப்ரதாயகாய நம:
    30. ஓம் ப்ரம்மண்ய போஷகாய நம:
    31. ஓம் நானாவித புஷ்பார்ச்சித பதாய நம:
    32. ஓம் ருத்ராக்ஷ கிரிட தாரிணே நம:
    33. ஓம் பஸ்மோத் தூளித விக்ரஹாய நம:
    34. ஓம் ஸர்வக்ஞாய நம:
    35. ஓம் ஸர்வ சராசர வ்யாபகாய நம:
    36. ஓம் அநேக சிஷ்ய பரிபாலகாய நம:
    37. ஓம் மனஸ்சாஞ்சல்ய நிவர்த்தகாய நம:
    38. ஓம் அபய ஹஸ்தாய நம:
    39. ஓம் பயாபஹாய நம:
    40. ஓம் யக்ஞ புருஷாய நம:
    41. ஓம் யக்ஞாநுஷ்டான ருசிப்ரதாய நம:
    42. ஓம் யக்ஞ ஸம்பன்னாய நம:
    43. ஓம் யக்ஞ ஸஹாயகாய நம:
    44. ஓம் யக்ஞ பலதாய நம:
    45. ஓம் யக்ஞ ப்ரியாய நம:
    46. ஓம் உபமான ரஹிதாய நம:
    47. ஓம் ஸ்படிக துளஸீருத்ராக்ஷ ஹார தாரிணே நம:
    48. ஓம் சாதுர்வர்ண்ய ஸமத்ருஷ்டயே நம:
    49. ஓம் ருக் யஜுஸ் ஸாமாதர்வண சதுர்வேத ஸம்ரக்ஷகாய நம:
    50. ஓம் தக்ஷிணாமூர்த்தி ஸ்வரூபாய நம:
    51. ஓம் ஜாக்ர ஸ்வப்ன ஸூஷுப்தயவஸ்வாதீதாய நம:
    52. ஓம் கோடி ஸுர்யதுல்ய தேஜோமயசரீராய நம:
    53. ஓம் ஸாதுஸங்க ஸம்ரக்ஷகாய நம:
    54. ஓம் அச்வ கஜ கோ பூஜா நிர்வர்த்தகாய நம:
    55. ஓம் குருபாதுகா பூஜா துரந்தராய நம:
    56. ஓம் கனகாபிஷிக்தாய நம:
    57. ஓம் ஸ்வர்ண பில்வதள பூஜிதாய நம:
    58. ஓம் ஸர்வ ஜீவ மோக்ஷதாய நம:
    59. ஓம் மூகவாக்தான நிபுணாய நம:
    60. ஓம் நேத்ர தீக்ஷாதானாய நம:
    61. ஓம் த்வாதசலிங்க ஸ்தாபகாய நம:
    62. ஓம் கான ரஸஞ்ஞாய நம:
    63. ஓம் ப்ரஹ்ம ஞானோபதேசகாய நம:
    64. ஓம் ஸகலகலா ஸித்திதாய நம:
    65. ஓம் சாதுவர்ண்ய பூஜிதாய நம:
    66. ஓம் அநேகபாஷா ஸம்பாஷண கோவிதாய நம:
    67. ஓம் அஷ்டஸித்திப்ரதாயகாய நம:
    68. ஓம் ஸ்ரீ சாரதாமட ஸுஸ்திதாய நம:
    69. ஓம் நித்தியான்னதான ஸுப்ரீதாய நம:
    70. ஓம் ப்ரார்த்தனாமாத்ர ஸுலபாய நம:
    71. ஓம் பாதயாத்ரா ப்ரியாய நம:
    72. ஓம் நானாவிதமத பண்டிதாய நம:
    73. ஓம் சுருதி ஸ்ம்ருதி புராணஞ்ஞாய நம:
    74. ஓம் தேவ யக்ஷ கின்னர கிம்புருஷ பூஜ்யாய நம:
    75. ஓம் ச்ரவணானந்தகர கீர்த்தயே நம:
    76. ஓம் தர்சனானந்தாய நம:
    77. ஓம் அத்வைதானந்த பரிதாய நம:
    78. ஓம் அவ்யாஜ கருணா மூர்த்தயே நம:
    79. ஓம் சைவவைஷ்ணவாதி மான்யாய நம:
    80. ஓம் சங்கராசார்யாய நம:
    81. ஓம் தண்ட கமண்டலு ஹஸ்தாய நம:
    82. ஓம் வீணாம்ருதங்காதி ஸகலவாத்யநாத ஸ்வரூபாய நம:
    83. ஓம் ராமகதா ரஸிகாய நம:
    84. ஓம் வேத வேதாங்க ஆகமாதி ஸகலகலா ஸதஸ் ப்ரவர்தகாய நம:
    85. ஓம் ஹ்ருதய குஹாசயாய நம:
    86. ஓம் சதருத்ரீய வர்ணித ஸ்வரூபாய நம:
    87. ஓம் கேதாரேஸ்வர நாதாய நம:
    88. ஓம் அவித்யா நாசகாய நம:
    89. ஓம் நிஷ்காம கர்மோபதேசகாய நம:
    90. ஓம் லகுபக்திமார்கோபதேசகாய நம:
    91. ஓம் லிங்கஸ்வரூபாய நம:
    92. ஓம் ஸாலக்ராம ஸூக்ஷ்மஸ்வரூபாய நம:
    93. ஓம் காலட்யாம் சங்கரகீர்த்திஸ்தம்ப நிர்மாண கர்த்ரே நம:
    94. ஓம் ஜிதேந்த்ரியாய நம:
    95. ஓம் சரணாகதவத்ஸலாய நம:
    96. ஓம் ஸ்ரீ சைலசிகரவாஸாய நம:
    97. ஓம் டம்ரிகநாத விநோதனாய நம:
    98. ஓம் வ்ருஷபாரூடாய நம:
    99. ஓம் துர்மதநாசகாய நம:
    100. ஓம் ஆபிசாரிகதோஷ ஹர்த்ரே நம:
    101.  ஓம் மிதாஹாராய நம:
    102. ஓம் ம்ருத்யுவிமோசன சக்தாய நம:
    103. ஓம் ஸ்ரீசக்ரார்ச்சன தத்பராய நம:
    104. ஓம் தாஸாநுக்ரஹ க்ருதே நம:
    105. ஓம் அனுராதா நக்ஷத்ர ஜாதாய நம:
    106. ஓம் ஸர்வலோக க்யாதசீலாய நம:
    107. ஓம் வேங்கடேச்வர சரணபத்மஷ்டபதாய நம:
    108. ஓம் ஸ்ரீ த்ரிபுரசுந்தரி ஸமேத ஸ்ரீ சந்திரமௌலீஸ்வர பூஜாப்ரியாய நம:

    மஹாஸ்வாமி பாத அஷ்டோத்தர சதநாமாவளி ஸம்பூர்ணம்.

  • Adhi Sankarar,  Guruvadithaamarai

    Guru Ashtakam Lyrics in Tamil With Meaning

    Guru Ashtakam Lyrics in Tamil With Meaning – குரு அஷ்டகம்

     

    1.சரீரம் ஸுரூபம் ததா கலத்ரம்

    யச:சாரு சித்ரம் தனம் மேருதுல்யம்மிமி

    மனஸ்சேத் ந லக்னம் குரோரங்க்ரிபத்மே

    தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம்

    அழகான சரீரம், அழகான மனைவி, பல விதமான புகழ், மேரு மலை போன்ற செல்வம் இவை அனைத்தும் இருந்தாலும் குருவின் கமலப் பாதங்களில் உன் மனம் ஒன்றாவிட்டால் பிறகு என்ன தான் பயன்? என்ன பயன்? என்ன பயன்?

    2.கலத்ரம் தனம் புத்ரபௌத்ராதி ஸர்வம்

    க்ருஹம் பாந்தவா:ஸர்வ மேதத்ஹிஜாதம் I

    மனஸ்சேத் ந லக்னம் குரோரங்க்ரிபத்மே

    தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம் II

    மனைவி, செல்வம், புத்ரன், பேரன், வீடு, உறவினர்கள், புகழ் வாய்ந்த குடும்பத்தில் பிறப்பு – ஆகியவைகள் அனைத்தும் இருந்தும் குருவின் கமலப் பாதங்களில் உன் மனம் ஒன்றாவிட்டால், பிறகு என்ன பயன்? என்ன பயன்? என்ன பயன்?

    3.ஷடங்காதி வேதோ முகே சாஸ்த்ரவித்யா கவித்வாதி கத்யம் ஸுபத்யம் கரோதிமி மனஸ்சேத் ந லக்னம் குரோ ரங்க்ரிபத்மே தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம் II

    வேதத்தின் ஆறு பகுதிகளிலும் பாண்டித்தியம், நான்கு வேத இலக்கியம் முழுமையும் கரைகண்ட கல்வி, உயர்ந்த இலக்கிய உரை நடை – கவிதை ஆகியவைகளைப் படைக்கும் திறன் – ஆகியவைகள் அனைத்தும் இருந்தும்,குருவின் கமலப் பாதங்களில் உன் மனம் ஒன்றாவிட்டால் பிறகு என்ன பயன்? என்ன பயன்? என்ன பயன்?

    4.விதேசேஷ மான்ய:ஸ்வதேசஷ தன்ய:

    ஸதாசார வ்ருத்தேஷ மத்தோ ந சான்ய: I

    மனஸ்சேத் ந லக்னம் குரோரங்க்ரிபத்மே

    தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம் II

    வெளி நாடுகளில் புகழ், சொந்த நாட்டில் பெரும் செல்வம், நல்லொழுக்கம், கீர்த்தி – ஆகியவைகள் அனைத்தும் இருந்தும் குருவின் கமலப் பாதங்களில் உன் மனம் ஒன்றாவிட்டால் பிறகு என்ன பயன்? என்ன பயன்? என்ன பயன்?

    5.க்ஷமாமண்டலே பூப பூபாலப்ருந்தை:

    ஸதா ஸேவிதம் யஸ்ய பாதாரவிந்தம்மி

    மனஸ்சேத் நலக்னம் குரோ ரங்க்ரிபத்மே

    தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம் II

    இந்தப் பார் முழுவதையும் ஆட்சி செய்யும் அரசர்கள் அனைவரும் உனக்கு சேவை செய்ய உன் பாதங்களில் தவம் கிடந்தாலும், குருவின் கமலப் பாதங்களில் உன் மனம் ஒன்றாவிட்டால் பிறகு என்ன பயன்? என்ன பயன்? என்ன பயன்?

    6.யசோ மே கதம் திக்ஷதானப்ரதாபாத்

    ஜகத் வஸ்து ஸர்வம் கரே யத்ப்ரஸாதாத்மி

    மனஸ்சேத் ந லக்னம் குரோரங்க்ரிபத்மே

    தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம் II

    உன் கொடைத்திறன் காரணமாக உன் புகழ் திக்கெட்டும் பரவி, இந்த உலகத்தில் எதையும் நீ அடையும் திறன் பெற்றிருந்தாலும் குருவின் கமலப் பாதங்களில் உன் மனம் ஒன்றாவிட்டால்,பிறகு என்ன பயன்? என்ன பயன்? என்ன பயன்?

    7.நபோகே நயோகே நவா வாஜிராஜௌ

    நகாந்தா முகே நைவ வித்தேஷ சித்தம்வீ

    மனஸ்சேத் ந லக்னம் குரோ ரங்க்ரிபத்மே

    தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம் II

    சுக போகம், ராஜ்யம், மனைவி, குடும்பம், செல்வம் –ஆகியவைகளில் உன் மனம் ஈடுபடாமல் துறவற மனப்பான்மையில் மூழ்கினாலும், குருவின் கமலப் பாதங்களில் உன் மனம் ஒன்றாவிட்டால்,பிறகு என்ன பயன்? என்ன பயன்? என்ன பயன்?

    8.அரண்யே ந வா ஸ்வஸ்ய கேஹே ந கார்யே

    ந தேஹே மனோ வர்ததே மே த்வநர்க்யேவீ

    மனஸ்சேத் ந லக்னம் குரோரங்க்ரிபத்மே

    தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம் II

    காட்டில் அல்லது வீட்டில் வசித்தாலும், உடலை வருத்திச் செயலில் ஈடுபட்டாலும் அல்லது பெரிய சிந்தனையில் மூழ்கினாலும், குருவின் கமலப் பாதங்களில் உன் மனம் ஒன்றாவிட்டால், பிறகு என்ன பயன்? என்ன பயன்? என்ன பயன்?

    9.குரோ ரஷ்டகம் ய:படேத் புண்யதேஹீ

    யதிர்பூபதி:ப்ரஹ்மசாரீ ச கேஹீவீ

    லபேத் வாஞ்சிதா ர்த்தம் பதம் ப்ரஹ்மஸம்ஜ்ஞம்

    குரோருக்தவாக்யே மனோ யஸ்ய லக்னம்மிமி

    சந்நியாசியாக இருந்தாலும், அரசராக இருந்தாலும், பிரம்மசாரியாக இருந்தாலும், அல்லது கிருஹஸ்தனாக இருந்தாலும், எவரொருவர் குருவின் மூலம் போதிக்கப்பட்ட இந்த ஸ்லோகங்களை மனத்தில் பதிய வைத்து, பாராயணம் செய்கிறார்களோ அவர்கள் விரும்பியதை அடைவார்கள். பிரம்ம பதவியையும் அடைவார்கள்.

  • Guruvadithaamarai

    குருவடித்தாமரை – பகுதி 3

    குருவடித்தாமரை – பகுதி 3

    சீடனைத்தேடும் குரு!

    நாம் ஒரு விஷயத்தில் தயாராக இருந்தால் அல்லது தீவிரமாக இருந்தால் இயற்கை (பிரபஞ்சம்) நமக்கு சாதகமாக எல்லா விஷயங்களையும் அதுவே நமக்கு செய்துகொடுக்கும்.

    நீங்கள் உங்கள் மனதில் ஆழமாக ஒரு பாடலை நினைத்துக்கொண்டே இருப்பீர்கள். நாள் முழுதும் அந்தப்பாடலை முணுமுணுத்துக்கொண்டே இருப்பீர்கள். திடீரென்று எங்கிருந்தோ காற்றில் கலந்து வரும் அந்தப்பாடல் உங்களைப்போன்ற யாரோ ஒருவர் சத்தமாகக் கேட்டுக்கொண்டிருப்பார். அல்லது எந்த ஊர்த் திருவிழாவிலோ அந்தப்பாடல் ஒலித்துக்கொண்டிருக்கும்.

    இப்போதிருக்கும் காலச்சூழலில் கூட, அதாவது நம் கூட்டுக்குடும்பங்கள் சிதைந்து, தனித்தனி தீவுகளானபிறகும் கூட, இது போன்றதொரு அனுபவம் நம் வாழ்வில் நடந்து கொண்டேதான் இருக்கிறது.

    இது ஏதோ யதேச்சையாக நடந்தது என்றெல்லாம் சொல்வதற்கில்லை. ஆனால், அது அப்படித்தான் நடந்தது என்று நாம் நம்மை ஆறுதல்படுத்திக்கொள்கிறோம். ஏனெனில், பயம். ஒரு விஷயத்தில் இன்னும் இன்னும் ஆழமாகச்செல்ல பயம். மேலோட்டமாக இருந்து கவனித்து, பிறகு அதைப்பற்றிய நினைவை நம் என்னனத்தில் இருந்து தூக்கிவிடுவது. அல்லது கலைத்துவிடுவது.

    இது போன்ற சம்பங்களை நினைக்கும் பொழுது, அலல்து நடக்கும் பொழுது, நான் அதை மீண்டும் சோதனை செய்துபார்ப்பேன்.

    உதாரணமாக, நான் எப்பொழுது என் கைக்கடிகாரம் அலல்து என்னுடைய அலைபேசியைப் பார்த்தாலும் 05:05 என்றோ, அல்லது 11:11 என்றோ அல்லது 03.33 என்றோ, அல்லது 02:02 என்றோ இப்படியாக இருக்கும்.

    இது ஒரு பெரிய விஷயமாகப்படவில்லை. ஆனால், இதில் என் எண்ணத்தின் அலை இருப்பதாகக்கருதுகிறேன்.

    ஒரு முறை எதேச்சையாக நான் மணி பார்க்கும்பொழுது 10:10 என்று இருந்ததை என் மனம் பதிவு செய்து வைத்துக்கொள்கிறது.
    என் எண்ணத்தை அதன் மீது செலுத்தி, இது போல் அடுத்தமுறையும் நடக்குமா, பார்க்கலாம் என்று அதை சோதனை செய்துபார்க்க மனம் ஏங்குகிறது.

    அதே சமயம், நம் உள்ளுக்குள் இருக்கும் ஆழ்மனதின் ஆசை, எப்போது பார்த்தாலும் இது போன்ற “காம்பினேஷன்” வரவேண்டும் என்று தீவிரமாக இருக்கிறது. அது ஆசைப்படுகிறது. இந்த ஆழமனத்தின் வெளிப்பாடுதான் நான் எப்போது மணி பார்த்தாலும் என் ஆழமான விருப்பப்படி 04:04 என்றோ அலல்து 20:20 என்றோ காண்பிக்கிறது. அதைப்பார்த்ததும் ஆழ்மனது மட்டுமல்ல; நாமும் மகிழ்ச்சி அடைகிறோம்.

    நான் அடைந்தேன். அதைப்பலரிடமும் காண்பித்து, “இதோ பாருங்கள்; நான் எப்பொழுது டைம் பார்த்தாலும் இப்படித்தான் fancy யாக காண்பிக்கிறது” என்று சொல்லி எல்லோரிடமும் நான் காண்பித்துக்கொண்டிருப்பேன்.

    இதில் இன்னொரு உளவியல் பார்வை என்னவாக இருக்கிறது என்றால், இப்படி மணி பார்க்கும்பொழுது, அந்த “காம்பினேஷன்” வரும்பொழுது, ‘நமக்கு நல்லது நடக்கும்’ என்று என் ஆழ்மனதைச்சொல்லச்சொல்கிறேன்.
    ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்பதைப்போல, அதுவும் நான் நினைப்பது போன்றே அந்த மணியைக்காட்டும்.

    இந்த ஆற்றலை, நம் தொழிலில் அல்லது வேலையில் நம் ஆழ்மனதின் சக்தியைப்பெருக்க நாம் உபயோகப்படுத்தவேண்டும். இது சம்பந்தமாக நாம் வேறொரு சந்தர்ப்பத்தில் விரிவாக ஆராய்ந்து பார்த்துப்பேசலாம்.

    ஆக, நாம் எப்படியெல்லாம் நினைக்கிறோமோ, அப்படி எல்லாம் நடக்கும் என்பதற்கான உதாரணங்கள்தான் இவையெல்லாம்.
    நாம் எப்படியெல்லாம் இருக்க ஆசைப்படுகிறோமோ அப்படியெல்லாம் ஆகலாம், நாம் எப்படியெல்லாம் நடக்கவேண்டும் என்று நினைக்கிறோமோ அபப்டியெல்லாம் நடக்கும் தீவிரமாக இருந்தால் ‘ என்பது இது போன்ற சம்பவங்கள் மூலம் உறுதியாக நமக்குப்புலப்படுகிறது.

    நீங்கள் குருவைத்தேடினால்…அது பற்றித் தீவிரமாக இருந்தால்…அந்த வைராக்கியம் இருந்தால்…குரு உங்களைவந்து கண்டடைவார்.

    அப்பொழுது நீங்கள் செய்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். அவரை நம்புவது. உளமார நம்புவது. உறுதியாக நம்புவது. இறுதியாக அவரையே சரணடைவது.

    என் சிற்றறிவுக்கு எட்டியவரை, குருதான் தன மாணவனைத்தேர்ந்தெடுக்கிறார். முதன்மையான மாணவனைத்தேடிதேடி அலைகிறார். இதில் குருவின் பங்கு மிக மகத்தானது.

    யார் சீடனாகத்தகுதியோடு இருக்கிறான் என்பதை சதா சர்வ காலமும் தேடியபடியேதான் இருக்கிறார்.

    ஒரு குருவின் வேலை என்பது இந்த பிரபஞ்ச இயக்கத்தோடு ஒத்திசைவோடு இயங்குவது. இயற்கைக்கு மாறாக எந்தவித துஷ்பிரயோகமும் நடக்காமல் பார்த்துக்கொள்வது அல்லது நடந்தால் அதைக்கண்டிப்போடு எடுத்துரைப்பது. அதைப்போன்ற நல் இதயங்களோடு அப்படிப்பட்ட மனிதர்களோடு உரையாடுவது.

    அவர்களைத் தேடிக்கண்டுபிடித்து தன்னுடனே வைத்துக்கொள்வது. அல்லது சத்சங்கங்கள் நடத்துவது. தன் பணி என்னவாக இருக்கிறது, அதற்கு எப்படிப்பட்ட ஆட்களை வைத்து வேலை வாங்குவது, அந்தக்காரியத்தை தன மனா உறுதியால் எப்படி வென்று முடிப்பது…

    ஒரு குருவின் செயல் என்பது ஒரு பூவைப் பறிக்கும்போதும் அதற்கு வலிக்காமல் அந்தச்செடியில் இருந்து அதைத்தனியே பிரித்தெடுப்பது…

    ஒரு குருவின் அருகாமை உங்களை என்னவெல்லாம் செய்யும்?

    எந்தவிதக்கேள்வியுமில்லாமல் செய்துவிடும் அற்புதக்கணங்களாக ஒவ்வொரு நொடியும் நம்மை மாற்றிவிடும்.

    நம் மேட்டிமைத்தனம், நம் படிப்பு, கர்வம், திமிர், அகங்காரம், கெளரவம், கோபம், ஆத்திரம், பொறாமை,நடிப்பு, – இப்படி எல்லாத்தனித்தனிக்குணங்களும் ஒரே நொடியில் அடித்துவீழ்த்தப்படும் இடம் – இப்படி நடந்தால் குரு உங்கள் எதிரே இருக்கிறார் என்று அர்த்தம்!

    இப்படி ஆகிவிட்டால், நீங்கள் சீடனாக நீங்கள் தயாராகிவிட்டீர்கள் என்று அர்த்தம்.

    குரு என்பவர் உங்களை அடையாளம் கண்டுகொண்டுவிட்டார் என்று அர்த்தம்.
    குருவை நீங்கள் அடையாளம் கண்டுகொள்ளவேண்டிய அவசியம் இல்லை. அவரே உங்களைக்கண்காணிப்பார்.

    நம் பிறப்பு எப்படி இந்தப்பிரபஞ்சத்தால் முடிவு செய்யப்பட்டதோ, அப்படியே குருவிடம் நாம் சென்று சேர்வதும் தன்னிச்சையாக நடக்கும் ஒரு செயலாக ஆகிவிடும்.
    நாம் அதற்கு எந்தவிதக்கோட்பாடுகளும் போட்டுக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை.

    இன்னின்ன முறையை எல்லாம் நாம் கடைப்பிடித்தால்தான் நம்மைத்தேடி குரு வருவார்; நம்மை ஆட்கொள்வார் என்று எந்தவித சஞ்சலமான சிந்தனையும் வேண்டாம்.

    அன்பு ஒன்றே போதுமானது. குருவின் அடைக்கலம் புக, அன்பிற்கு ஈடு இணையில்லை.

    எல்லாம் சரிதான்…குரு சீடனைத்தேடியாயிற்று. சீடன் குருவை அடைந்தாயிற்று.

    இந்த உலகில் “குரு” – ஸ்தூல ரூபமாகத்தான் இருக்கவேண்டுமா? குருவின் அடிப்படை குணங்களாக நாம் என்னென்ன வரையறைகள், கற்பனைகள் வைத்திருக்கிறோம்?

    அவரின் இருப்பிடம் எது? இப்படையெல்லாம் இருந்தால்தான் அவர் குரு என்று ஏதாவது நமக்குள் ஒரு சில எண்ணங்கள் இருக்கின்றனவா?

    உலகில் ஒரே ஒரு குருதான் இருக்கவேண்டுமா?

    நான் சீடனாகிவிட்டேன் என்பதை எப்படிக் கணிப்பது?
    குரு தான் தன் சீடனைத்தேர்ந்தெடுக்கிறார் எனில், அந்த குருவிடம் நான் எப்படி நடந்து கொள்ளவேண்டும்?

    குரு-சீடன் உறவு எப்படி இருக்கும்?

    எல்லாமே மறுபடி கேள்விகளாகவே வந்து முடிகின்றன.

    எல்லாகேள்விகளுக்கும் பதில் இருக்கவேண்டுமல்லவா?

    அதையும் பார்த்துவிடுவோம்!

    நன்றி:
    மகாபெரியவா படம் – ஓவியம்: செந்தில்குமார் அமிர்தலிங்கம்

  • Guruvadithaamarai

    குருவடித்தாமரை – பகுதி 2

    Kanchi Maha Periyavaa

    உங்கள் அம்மா என்பவர் யார்? 

    யார் சொல்லி உங்களுக்கு அவர்களைத்தெரியும்?  

    உங்கள் அப்பா யார் என்பதை உங்கள் அம்மா சொல்லித்தான் உங்களுக்குத்தெரியவரும். அப்போது, உங்கள் அம்மாவை, உங்கள் அம்மாதான் இவர் என்று யார் சொல்லி உங்களுக்குத்தெரியும்?

    இது அவ்வளவு சிக்கலான கேள்வியாக இல்லை என்பது உங்களுக்குத்தெரியும். ஆனால், இது அத்தனை சிக்கலானது. 

    நீங்கள் அநேக திரைப்படங்களில் பார்த்திருப்பீர்கள். ஒரு குழந்தையை வளர்க்கும் தாய் அவனின் 20 வயது வரும்போது சொல்வாள். “நான் உனக்கு உண்மையான தாய் இல்லையென்று”.

    அவள் எப்படிச்சொன்னாலும் அவளுக்கு அவன் குழந்தைதான். அதை மாற்றமுடியாது. தன் கருவில் இருந்து வந்தவர்கள் மட்டுமே குழந்தையென்று ஒரு தாய் நினைக்க வாய்ப்பே இல்லை. 

    அதே போல, அந்தக்குழந்தைக்கும். அவனுக்கு இருப்பது வயதானாலும் சரி, அறுபது வயதானாலும் சரி, தன்னை அருகிலிருந்து சீராட்டிப்பார்த்துக்கொண்டவள்தான் அம்மா. அவள் அவனைப்பெற்றவளாகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை.  அருகிருந்து அந்தக்குழந்தையை எப்படிப்பார்த்துக்கொண்டார்கள் என்று அந்தக்குழந்தைக்குத்தெரியும். யாரும் சொல்லித்தெரியவேண்டியதில்லை.

    இந்த உறவில் எந்த ஒரு கேள்வியும் இந்த இருவருக்கும் இருப்பதில்லை. இதில் மூன்றாவது ஆளாக நாம் இருந்து பார்ப்பதில்தான் சிக்கலைகள் ஏற்படுகின்றன.

    தகப்பனின் செய்தி கூட ஒரு குழந்தைக்கு இரண்டாம்பட்சம்தான். ஆனால், தாய் என்பது, தன் ஒவ்வொரு அசைவிலும் அணுவிலும் இருக்கும் விஷயம் என்பதை ஒரு பிள்ளை உணர்ந்திருப்பான். அதற்கு நீங்கள் அந்தப்பிள்ளையைப்பெறவேண்டும் என்பது கூட இல்லை. உங்கள் வளர்ப்பிலேயே அதை நீங்கள் கண்கூடாகப்பார்க்கமுடியும்.

    அதைத்தான் இங்கு எத்தனையோ திரைப்படங்களாக எடுத்திருப்பார்கள். 

    சிறு வயதில் இருந்து ஒரு குழந்தை யாரிடம் வளர்கிறதோ, அவள்தான் அந்தக்குழந்தைக்கு அம்மா என்பதை யாரும் சொல்லித்தெரியவேண்டியதில்லை. அந்தக்குழந்தை அவள்தான் அம்மா என்பதை முழுவதுமாக நம்பும். அதில் எந்தக்கேள்வியும் இல்லை. 

    அவள் உண்மையில் அந்தக்குழந்தையைப் பெற்றதாயாகக்கூட இல்லாமல் இருக்கலாம். 

    அந்தக்குழந்தையைப்பொறுத்தவரை அவள்தான் தாய். இதுதான் சரணடைதல். முழுவதுமாக சரணடைதல். முழுவதுமாகத் தன்னை ஒப்புக்கொடுத்தல். எந்தக்கேள்வியுமில்லாமல் தன்னை ஒப்புக்கொடுத்தல், அந்தக்குழந்தையைப்போல. அந்தக்குழந்தைக்குத்தெரியாது இதுதான் சரணடைதல் என்பது. 

    அந்தக்குழந்தையின் மனநிலைதான் நமக்கும் வரவேண்டும். 

    இதற்கு முன் நமக்குப்பல கேள்விகள் இருந்தன. எல்லாவற்றையும் இங்கே பட்டியலிட்டோம். இன்னும் பட்டியலில் வராத கேள்விகள் ஆயிரக்கணக்கில் உண்டு. 

    ஒரு குழந்தையின் தாய் போல, நீங்கள் தேடும் குரு இருப்பார். 

    அந்த குருவிடம் அந்தக்குழந்தையின் மனநிலையில் நீங்கள் இருப்பீர்கள். இந்த இரண்டும் சந்திக்கும் இடம்தான் குரு-சீடன் உறவு ஆரம்பிக்கும் இடம்.

    இது அத்தனை உயர்வான இடமா என்ன என்று கேட்பவர்களுக்கு:

    1. குரு என்பவர் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. அதே போல அம்மா என்பவள் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. அப்படியே அம்மா இருந்தாலும் அவர்களின் அருமையை நம்மில் எத்தனை பேர் உணர்ந்திருக்கிறோம்? உணர்ந்து செயல்படுத்தி இருக்கிறோம்?

    2. நம்மில் எத்தனை பேர் அந்தக்குழந்தையின் மனநிலையில் இருக்கிறோம்? சரணாகதி என்பது எத்தனை பேருக்கு வாய்த்திருக்கிறது?

    3. நம் பகுத்தறியும் அறிவு எத்தனை விஷயங்களை பகுப்பாய்ந்து, தர்க்க ரீதியில் தன்னை நிலை நிறுத்தி இருக்கிறது? தர்க்க ரீதியில் பார்க்கும்போது கூட நமக்கு ஒரு ஆசிரியர் என்றொருவர் தேவைப்படுகிறார். ஆனால், எல்லா ஆசிரியர்களும் குருவாக முடிவதில்லை.

    4. எப்படி எந்தக்கேள்வியும் இல்லாமல் உங்கள் அம்மாவை நீங்கள் அடையாளம் காண்கிறீர்களோ, அதே போல, எந்தவித வியாக்கியானங்களுக்கும் இடம் கொடுக்காமல் எல்லா நேரமும் நம்மால் இருக்க முடிகிறதா?

    5. நாம் சீடனாக இருக்கும் தகுதியை வளர்த்துக்கொள்ளாத போது , நம்மைத்தேடி எப்படி குரு வருவார்?

    6. உண்மையில் இது போல ஒரு உறவு இருக்கிறதா என்ன? இதை எப்படி நாம் நம்புவது? நம் குரு – சீடன் பாரம்பரியம் எப்படி இருந்திருக்கிறது இங்கே என்பதைப்பார்த்தால்தான் இதற்கு ஒரு தெளிவான விளக்கம் கிடைக்கும் என்று தோன்றுகிறது.

    இத்தனை கேள்விகள் நம்மிடம் இருக்கிறது. 

    குரு பரம்பரை என்னும் விளக்கத்திற்குக்கூட நீங்கள் போக வேண்டாம். இப்போது மனித உறவுகள் இருக்கும் சூழலில் உங்கள் வீட்டுக்கு எத்தனை பேரை அழைத்து, அதாவது, உங்களுக்கு யாரென்றே தெரியாத நபர்களை அழைத்து ஒரு வேளை உணவு இடுவது என்ற வழக்கம் இருக்கிறது?

    எப்போது உலகம் நம் கைக்குள் வந்ததோ, எப்போது நாம் பொருட்களுக்கு அடிமையாகிப்போனோமோ, அப்போதில் இருந்தே நாம் உயிர்களை மதிப்பதை கொஞ்சம் கொஞ்சமாக நம்முடைய மனத்தில் இருந்து நீக்கிக்கொண்டே வருகிறோம்.

    நம்மில் எத்தனை பேர் நம் குழந்தைகளுக்கு ஒரு உயிரின் தன்மையை விரிவாக எடுத்துச்சொல்லி இருக்கிறோம்? அல்லது அப்படி நாம் அவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக நடந்திருக்கிறோம்?

    இது குறைசொல்வதற்கான பகுதி அல்ல. நம்மை நாமே திரும்பிப்பார்த்துக்கொள்வதற்கான ஒரு வாய்ப்பு. 

    மன நிம்மதியோடும் மனா மகிழ்ச்சியோடும் வாழ நமக்கு என்ன தேவை என்பதைப்பற்றிய ஒரு ஆராய்ச்சி. இது இல்லாமல்தான் இப்போது இந்த உலகம் திண்டாடுகிறது. தள்ளாடுகிறது. 

    சரி, இன்னும் நம் கேள்விக்கு ஒரு சரியான பதில் கிடைக்கவில்லை. குரு-சீடன் பாரம்பரியத்தை நாம் அலசும் முன், இதற்கு ஒரு விடை கிடைக்கவேண்டுமே?

    குரு என்பவர் யார்?

    ஒரே வார்த்தையில் கூறினால் :

    1. யார் உங்கள் எல்லாக்கேள்விகளுக்கும் பதிலாக வந்து நிற்கிறாரோ, அவர்தான் உங்கள் குரு.

    2. எங்கே உங்கள் கேள்விகள் எல்லாம் அடங்கி விடுகிறதோ, அந்த இடம்தான் நீங்கள் தேடிவந்த இடம்.

    3. எப்போது உங்கள் எல்லாச்செயல்களுக்கும் நீங்களே பொறுப்பேற்கிறீர்களோ, அப்போதே நீங்கள் சீடனாகிவிட்டீர்கள்.

    4. எந்த நினைவுகள் வந்து உங்களை தூங்கச்செய்யாமல் இங்குமங்கும் நிலையில்லாமல் சுற்றித்திரிகிறீர்களோ அந்த நேரம்தான் உங்கள் குருவைத்தேடிப்போகும் நேரம்.

    5. உங்களின் இந்த நிலையில்லாத செயல்களால் குருவே உங்கள் கனவில் வருவார்; அவரை நீங்கள் அடையாளம் கண்டுகொள்வீர்கள். 

    6. எவர் வந்தால் உங்கள் வாழக்கையில் பொறாமை அழிகிறதோ அவரே குரு.

    7. எவர் வந்தால் உங்கள் எண்ணங்கள் பட்டை தீட்டப்படுகிறதோ அவரே குரு.

    8. எவர் வந்தால் நீங்கள் சமாதானம் ஆகிறீர்களோ அவரே குரு.

    9. எவர் வந்தால் நீங்கள் அமைதியாகிறீர்களோ அவரே குரு.

    10. எவர் வந்தால் நீங்கள் பரிபூரணத்துவம் எய்துகிறீர்களோ அவரே குரு.

    11. எவர் வந்தால் தான் என்கிற அகந்தை அழிகிறதோ அவரே குரு.

    எல்லாம் சரி; குரு இப்படி இருப்பார்; அப்படி இருப்பார். கனவில் வருவார்;நேரில் வருவார் என்பதெல்லாம் சரி;

    அவரை எப்படி அடையாளம் கண்டுகொள்வது? இது ஒரு மிகப்பெரிய குழப்பமான மனநிலையை அல்லவா கொடுக்கிறது? இதில் இருந்து எப்படி வெளியில் வந்து இவர்தான் என் குரு என்று எப்படி அவரை வரவேற்பது; அல்லது எப்படி அவரை அரவணைப்பது? எப்படி ஆலிங்கனம் செய்வது?

    ஒரு சீடனாக, இது ஒரு மிகப்பெரிய கேள்வி அல்லவா?

    நம் முன் கடவுளே நேரில் தோன்றினாலும் நாம் கேள்விகள் கேட்போம். அல்லது கடவுள் தோன்றியதையே நாம் கேலி செய்வோம்.

    கிட்டத்தட்ட அது போன்ற ஒரு சிக்கலான ஒரு கேள்விதான் இது. 

  • Guruvadithaamarai

    குருவடித்தாமரை…!

    -சீனிவாசன் இராமானுஜம்

    பகுதி – 1

    குரு என்பவர் யார்?

    “நீ என்னிடம் வருவாய் என எனக்குத்தெரியும் நரேன்” என்றார் இராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தரைப்பார்த்து.

    அப்போதுதான் பரமஹம்சர் விவேகானந்தரைப்பார்க்கிறார்.

    அந்த முதல் பார்வையிலேயே அவருக்குத்தெரிந்துவிடுகிறது இவர்தான் நம் சீடரென்று.

    அதன்பிறகு எத்தனையோ உரையாடல்கள்; உரசல்கள்; பேச்சுவார்த்தைகள்; எத்தனை இருந்தும் இராமகிருஷ்ணர் சொன்னதுதான் பலித்தது.

    சுவாமி விவேகானந்தர் தான் அவருடைய முதன்மைச் சீடர் ஆனார்.

    அதற்குப்பிறகு நடந்ததெல்லாம் வரலாறு.

    இங்கே தான் நமக்கு ஒரு கேள்வி இருக்கிறது.

    குரு என்பவர் யார்?

    நம் வாழ்க்கைக்குள் குரு என்பவர் என்ன செய்கிறார்? 

    குரு என்பவர் நிச்சயம் நம் வாழ்வுக்கு அவசியமா?

    குருவிற்கும் ஆன்மீகத்திற்கும் சம்பந்தம் உண்டா?

    இப்படி பல கேள்விகள் இருக்கின்றன. 

    இந்தக்கேள்விகள் எல்லாம் அர்த்தமானவையா அல்லது அர்த்தமற்றவையா என்பதை அறிந்துகொள்வதற்குக்கூட “குரு” நமக்கு அவசியமாகிறார்.

    குரு என்பவர் யார் என்ற கேள்விக்குள் நாம் புகுமுன்னர் சில கருத்துக்களை நாம் நமக்குள் அசைபோட்டுவிடுவது நல்லது. இது ஒரு தெளிவான பாதைக்குள் நம்மை அழைத்துச்செல்ல வழிவகுக்கும்.

    1. ஆன்மிகம் என்றாலே நமக்கு வயதாகிவிட்டது என்ற தவறான அணுகுமுறை ஒன்று உள்ளது. அல்லது வயதானவர்களுக்குத்தான் ஆன்மிகம் பற்றிப்பேசவோ அல்லது அது பற்றி சிந்திக்கவோ வேண்டும் தவறான புரிதல் இங்கே உள்ளது.

    2. நம் வீட்டிலே ஒரு பொதுவான அம்சம் – நம் வீட்டுப்பெரியவர்கள்தான் சாமி கும்பிடும் வழக்கத்தை வைத்திருக்கிறார்கள். சிறியவர்களை அலல்து குழந்தைகளை அதில் ஈடுபடுத்துவதில்லை அல்லது எல்லா வேலையும் முடிந்த பிறகு, கடைசி விஷயமாக அவர்களை அழைத்து, சாமி கும்பிட வைப்பார்கள். 

       வீட்டின் பூஜை அறை என்பதில் இருக்கும் நுணுக்கங்களை நம் குழந்தைகளுக்கும் சொல்லித்தரும் கலை…அடுத்த தலைமுறைக்கு கடத்துகின்ற, அந்தப்பெரும்பான்மை மன நிலையை அது இழந்திருக்கிறது.

    3. ஆன்மிகம் சம்பந்தமாகப்பேசினாலோ அல்லது அது குறித்த சந்தேகங்களைத் தெளிவுபடுத்த சத்சங்கங்களை நாடினாலோ அல்லது ஒத்த அலையுள்ள ஒரு குழுவுக்குள் நம் சந்தேகங்களை நிவர்த்திசெய்துகொண்டாலோ அல்லது இந்தப்பழக்கத்தைத்தொடர் பழக்கமாக வைத்திருந்தாலோ நமக்கு “என்னவோ” நடந்துவிட்டது என்று எண்ணும் மக்கள் கூட்டம் இங்கே அதிகம். 

    4. அதேபோல, நமக்கு பக்தி சம்பந்தப்பட்ட, ஆன்மிகம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் அதிகம் தெரியும் எனும் அலட்டல் உள்ள ஆசாமிகளுக்கு இங்கே குறை ஒன்றுமில்லை. அவர்கள் எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள்.

    5. கடவுளின் தேடல் அல்லது பக்தி குறித்த தெளிவான விளக்கங்கள் அல்லது நம் ஆன்மிகம் என்ன என்பது பற்றி ஆள் ஆளுக்கு ஒரு விஷயத்தை வைத்திருக்கிறோம். எதையும் அதாவது பெரும்பான்மையான மக்கள் ஒரு ஒழுங்குமுறை இல்லாமல் அவரவர் கருத்துக்களை தெளித்துச்செல்லும் ஒரு இயந்திரமாக இருப்பதை நம் கண்கூடாகப்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

    6. நாம் வேதங்களையோ அது குறித்த பொருளையோ உள்வாங்கிக்கொள்ளாமல், நம் வழிபாடு முறை அனைத்தும் ஏதோ ஒரு பலனை எதிர்பார்த்து, மனம் முழுதும் அந்தப்பலனைக்குறித்தே நினைத்து… இப்படித்தான் நம் தெய்வவழிபாடு இப்போது இருக்கிறது. இருந்துகொண்டிருக்கிறது. 

     நம் பக்தி என்பது ஒரு எதிர்பார்ப்பில் அடங்கிவிடுவதாக இருக்கிறது. கடவுளோ அல்லது அது குறித்த தத்துவமோ ஒருவித எதிர்பார்ப்பில் அல்லது பலனில் அடங்கிவிடுவதாக இருந்தால், நம்முடைய பக்தி என்பது எதை நோக்கி இருக்கிறது’ என்கிற கேள்வி வருகிறது.

    7. நம் ஒட்டுமொத்த ஆன்மீக அறிவு அல்லது பக்தி எதைச்சார்ந்ததாக இருக்கிறது’ என்கிற கேள்வி நமக்குள் எழுந்தால் அது ஒரு நல்ல அறிகுறி என்றே வைத்துக்கொள்ளலாம். ஏனெனில், அந்த நேர்மை நமக்கு மிகப்பெரிய பலமாக அல்லது பாலமாக அமையும், ஆன்மிகத்தை அறிந்துகொள்ள.

    8. நமது பொருளாதார நெருக்கடிகளால் அடிக்கடி கேலிக்குரிய அம்சமாகவும் இந்த ஆன்மிகம் இருக்கிறது அல்லது அதை நாம் அப்படிப்பார்க்கிறோம் என்பதை நாம் ஒப்புக் கொண்டுதான் ஆகவேண்டும். ஆனால், ஆன்மீகமோ அல்லது  அது சார்ந்த கடவுளோ அல்லது மதமோ அதன் புனிதத்தின் மீது அல்லது அந்தப்புனிதத்தன்மையின் மீது எந்தக்களங்கமுமில்லாமல் ஒரு காட்டாற்று வெள்ளம் போல ஒரு இடத்தில் அமைதியாகவும் சில இடத்தில் அடங்காததாகவும் பாய்ந்தோடிக்கொண்டே இருக்கிறது.

    9. நமக்கு ஒரு தேவை இருந்தால்தான் கடவுள் அல்லது பக்தி இதன்மீது ஒரு ஈர்ப்பு வருகிறது என்கிற கருத்து இங்கே நிலவுகிறது. எதனின் தேவை அதைத்தீர்மானிக்கிறது என்பதே இங்கே முதன்மையான கேள்வியாக இருக்கிறது.

    10. தினமும் ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒவ்வொரு கடவுளை வழிபடுவது அல்லது பல்வேறு விதமான பரிகாரங்களைச்செய்வது அல்லது நம்முடைய அன்றாட வாழ்வில் நடக்கும் அழுத்தங்களுக்கெல்லாம் கடவுள்தான் காரணம் என்று புலம்பித்தள்ளுவது – இதெல்லாம் இந்த ஆன்மீகப்பாதையில் எப்படி, எங்கே கொண்டு செல்லும்? இப்படிச்செய்வதால் நல்லது நடக்குமா? அல்லது கெட்டது நடக்குமா?

    11. நமக்கு நல்லது நடந்தால் கடவுளை நம்புவதும் தீயவை நடந்தால் கடவுளை நிந்திப்பதும் நம்முடைய வாழ்வின் ஒரு அங்கமாக இருப்பதை நாம் எல்லோரும் ஒப்புக்கொண்டுள்ளதான் வேண்டும். நிச்சயம் இது இப்படித்தான் நடக்க வேண்டுமா? 

    12. நம் எல்லாப்பிரார்த்தனைகளும் நம்மை எங்கே கொண்டுசெல்கின்றன? பொதுவாக நம் பிரார்த்தனைகள் ஒரு வேண்டுகோளை அடிப்படையாகக்கொண்டுதான் இயங்குகிறது. நாமும் ஒரு தேவையை முன்னிறுத்தித்தான் கடவுளை வழிபாடு செய்கிறோம். 

    பொதுவாக அந்தப்பிரார்த்தனைகள் எல்லாமே ஒரு சுயநல நோக்கத்தை அடிப்படையாகக்கொண்டதாகவே இருக்கிறது. இதுவும் இப்படித்தான் இருக்க வேண்டுமா? அல்லது நம் பிரார்த்தனைகள் அனைத்தும் நமக்காக மட்டும்தானா?

    13. நம் பிரச்சனைகள், நாம் சந்திக்கும் சோதனைகள், சவால்கள் – இப்படித்தான் நாம் ஆன்மிகம் பக்கம் ஒதுங்குகிறோம் என்கிற அடிப்படை உண்மை நமக்கு சில நேரம் வெட்கம் கொள்ளச்செய்கிறது. இதை எப்படி அணுகுவது? ஆன்மீகமும் சோதனைகள் நிறைந்தது என்று எல்லாரும் சொல்கிறார்களே…அப்படி என்றால் நாம் எங்கே தஞ்சம் புகுவது? 

    இவையெல்லாம் அடிப்படை கேள்விகள். நமக்குள் இருக்கும் அடிப்படை உண்மைகள். 

    இதையெல்லாம் யார் தீர்த்துவைப்பார்கள்? எங்கே போவது? 

    யாரிடம் சொல்வது? யாரை நம்புவது? மனிதர்களிடம் போவதா? தெய்வத்திடம் போவதா? அல்லது குருவிடம் போவதா?

    இன்னும் இன்னும் பல நூறு கேள்விகள் வந்துபோகின்றன நமக்குள்.

    ஒன்றும் இல்லை…நீங்கள் உங்களுக்குப்பிடித்த கடவுளிடம் கேட்டுக்கொண்டே இருங்கள்…

    அதாவது,  நீங்கள் சீடனாகும் தகுதியை வளர்த்துக்கொண்டால்…குரு உங்களைத்தேடி வருவார்!

    சரி…நான் சீடனாகும் தகுதியை வளர்த்துக்கொண்டுவிட்டேன்…குருவை எப்படி அடையாளம் கண்டுகொள்வது?

    அது ஒரு தெய்வத்தை அடையாளம் கண்டுகொள்வது போலல்லவா?

    எப்படிக்கேட்டாலும் நமக்குக்கேள்விதான் மிஞ்சுகிறது. ஒவ்வொரு கேள்விக்குள்ளும் ஒரு கேள்வி இருக்கிறது.

    அதற்கும் அந்தக்குருதான் வருவார். நமது கேள்விக்கெல்லாம் விடையாக வருவார்.

    நாம் ஒவ்வொரு கேள்வியாகக்கேட்டதற்கெல்லாம் ஒரே பார்வையில் பதிலாகச்சொல்வார்.

    அப்படி என்றால், அந்த குரு எப்படி இருப்பார்? எங்கே இருப்பார்? என்னை எப்படி அவர் தேர்ந்தெடுப்பார்?

    குரு என்பவர் யார்?

    — குருவடித்தாமரை தொடரும்…