• Guru

  பரஞ்சோதி பாபாவை பார்க்கலாம் வாங்க!

  paranjothi baba

  கல்யாண்குமார், பத்திரிகையாளர், எழுத்தாளர்

  டபழனி முருகன் கோயிலுக்குப் போகிறவர்கள், அதே தெருவில் கோயிலுக்கு முன்னதாக வலதுபுறம் பரஞ்சோதி பாபாவின் சிறிய அறையைப் பார்த்திருப்பார்கள். அவரது தீவிர பக்தர்களில் ஒருவர் இளையராஜா! அவர் உச்சத்தில் இருந்த நேரத்தில்கூட, அடைமழையிலும் வந்து பாபாவை தரிசித்துப் போவதை வழக்கமாகக் கொண்டிருந்தாராம்.

  அவரைத் தொடர்ந்து உலகப் பெற்ற டிரம்ஸ் சிவமணி, பாபாவின் டிவோட்டி. பத்து வருடங்களுக்கு முன், பாபா சமாதி அடைகிற நாளன்று அவரது விருப்பத்தின் பேரில் வடபழனியில் பாபாவின் முன்னிலையில் தன் கச்சேரியை நடத்தி இருக்கிறார். அந்தக் கச்சேரியில் சாக்ஸ் நாதனின் புல்லாங்குழல் இசையைக் கேட்டவாறே பாபா சமாதி அடைந்திருக்கிறார். இப்போது சாக்ஸ் நாதனும் பாபாவின் தீவிர டிவோட்டி.

  பாபாவை அடக்கம் செய்ய இடம் தேடியபோது பாபாவின் அன்பர் ஒருவர், ஸ்ரீபெரும்புதூர் அருகே சிப்காட் பகுதியில் அமைந்துள்ள பால் நல்லூர் கிராமத்தில் இருக்கும் தன் சொந்த இடத்தை கொடுத்திருக்கிறார். அங்கே அடக்கம் செய்யப்பட்ட பாபாவின் சமாதி இன்று அவரது டிவோட்டிகளின் ஆதரவோடு ஒரு ஆலயமாக உயர்ந்து நிற்கிறது.

  கடந்த பத்து வருடங்களாக அங்கே தினமும்  நூற்றுக்கணக்கானவர்களுக்கு அன்னதானம் தவறாமல் வழங்கப்படுகிறது. அவரது நினைவு தினத்தன்று வருடாவருடம் சிறப்பு பூஜைகள் நடைபெறுவதோடு, டிரம்ஸ் சிவமணி மற்றும் சாக்ஸ் நாதனின் கச்சேரிகளால் அந்த தினமே களைகட்டுகிறது.

  அவர் உயிரோடு வாழ்ந்த காலத்தில் வடபழனியில் இருந்த அவரது அறையில் அமைதியாக அமர்ந்தே இருப்பாராம். பக்தர்களிடம் அதிகம் பேசாத அவர், வருகிறவர்களின் பிரச்னைகளை முன்கூட்டியே தெரிந்து கொண்டு அதற்கு தீர்வளிப்பாராம். இப்போதும் பலரது கனவுகளில் வந்து ஆசீர்வதிப்பதாக நம்புகிறார்கள் அவரது பக்தர்கள்.

   நடிகர் மோகனும் பாபாவின் பக்தர்களில் ஒருவர். அடிக்கடி தன் மனைவியோடு வந்து பாபாவை தரிசித்துப் போவாராம். ஒருமுறை உடனடியாக அவரது மனைவியின் சொந்த நாடான ஆஸ்திரேலியாவுக்கு போக வேண்டிய நிர்பந்தம். ஆனால் வீட்டில் பீரோவில் வைத்திருந்த பாஸ்போர்ட்டை காணவில்லை. பீரோவையே தலைகீழாக புரட்டிப் போட்டுப் பார்த்தும் கிடைக்கவில்லை. மறுபடி விண்ணப்பித்தால் உடனடியாக கிடைக்க வாய்ப்பில்லை. கவலையோடு பாபாவிடம் போயிருக்கிறார் மோகன். பாபாவோ அமைதியாக,

   ’’பாஸ்போர்ட் வீட்டில்தான் இருக்கிறது, கவனமாக தேடிப்பார்’’ என்று சொல்லி இருக்கிறார். வீடு திரும்பிய மோகன், பீரோவை மறுபடி தீவிரமாக ஆராய்ந்தபோது இருவரின் பாஸ்போர்ட்டும் ஒரு இடுக்கில் சொருகிக் கொண்டிருந்தனவாம்!

  போன திமுக ஆட்சியில் நடந்த சம்பவம் இது. அண்ணாநகரில் வசிக்கும் மூத்த அமைச்சர் ஒருவர் அதே தெருவில் இருக்கும் ஒரு வீட்டின் மீது கண் வைத்திருக்கிறார். அங்கே வசிக்கும் வயதான தம்பதிகளிடம் அடிமாட்டு விலைக்கு அந்த வீட்டை கட்டாயமாக வாங்க முயற்சித்திருக்கிறார். விற்க மனசில்லாமலும் அமைச்சரை பகைத்துக் கொள்ள முடியாமலும் அந்த தம்பதி தவித்திருக்கிறார்கள். பாபாவைப் பற்றி யாரோ சொல்லி, அந்த தம்பதி பாபாவை நேரில் சந்தித்து தங்கள் பிரச்னையைச் சொல்லி இருக்கிறார்கள்.

  ‘’ நீங்கள் வீட்டுக்குப் போங்கள், எல்லாம் நல்லபடியாக  நடக்கும்’’ என்று சொல்லி பாபா அவர்களை நம்பிக்கை அளித்து அனுப்பி இருக்கிறார்.

  என்ன அதிசயம்! ஒரு வருடமாக இழுத்துக் கொண்டிருந்த அந்த அமைச்சர் பிரச்னை ஒரே நாளில் முடிவுக்கு வந்திருக்கிறது!

  மறுநாள் வீட்டுக்கு வந்த அமைச்சரின் ஆட்கள். ‘’உங்கள் வீட்டை வாங்க வேண்டாம் என்று அமைச்சருக்கு மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்திருக்கிறது, அதனால் உங்கள் பத்திரமெல்லாம் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் ‘’ என்று சொல்லி கட்டாயமாக வாங்கிப் போன ஒரிஜனல் பத்திரங்களை திருப்பிக் கொடுத்துவிட்டுப் போயிருக்கின்றனர்.

  ஒரே நாளில் அந்த ’மேலிட உத்தரவை’ பாபா பிறப்பித்ததாகவே அந்த தம்பதி நம்புகிறார்கள். பாபா மீது அவர்களுக்கு இருந்த அதே நம்பிக்கை இன்றும் தொடர்கிறது. அவரது சமாதியில் நடக்கும் அன்னதானத்திற்கு அந்த தம்பதிகளின் பங்களிப்பாக அரிசி மூட்டைகள் மாதாமாதம் வந்து இறங்குகின்றன.

  ரம்மி படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளருமான பாலகிருஷ்ணன், மாதம் இருமுறையாவது பாபாவை தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். ’’ அங்கே போய் ஒரு மணி நேரம் இருந்து விட்டு அன்னதானம் சாப்பிட்டு வந்தால் மனதுக்கு அமைதி கிடைக்கிறது. அது உலகில் வேறு எங்குமே கிடைக்காத ஒன்று’’ என்கிறார் அவர்.

  சினிமாக்காரர்கள் மட்டுமின்றி தமிழகம் முழுக்க இருந்தும் பலவிதமான தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் பாபாவை தரிசிக்க வந்து போகிறார்கள், அங்கே லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டிருக்கிற, சேரில் அமர்ந்திருக்கிற மாதிரியான பாபாவின் சிலை, தத்ரூபமாக பாபாவே நேரில் காட்சி அளிக்கிற மாதிரி இருப்பது, இதன் விசேஷம்.

   நீங்களும் ஒருமுறை பாபாவைப் பார்க்கலாம் வாருங்களேன். . .

    

   

 • Guruvadithaamarai

  குருவடித்தாமரை – பகுதி 3

  குருவடித்தாமரை – பகுதி 3

  சீடனைத்தேடும் குரு!

  நாம் ஒரு விஷயத்தில் தயாராக இருந்தால் அல்லது தீவிரமாக இருந்தால் இயற்கை (பிரபஞ்சம்) நமக்கு சாதகமாக எல்லா விஷயங்களையும் அதுவே நமக்கு செய்துகொடுக்கும்.

  நீங்கள் உங்கள் மனதில் ஆழமாக ஒரு பாடலை நினைத்துக்கொண்டே இருப்பீர்கள். நாள் முழுதும் அந்தப்பாடலை முணுமுணுத்துக்கொண்டே இருப்பீர்கள். திடீரென்று எங்கிருந்தோ காற்றில் கலந்து வரும் அந்தப்பாடல் உங்களைப்போன்ற யாரோ ஒருவர் சத்தமாகக் கேட்டுக்கொண்டிருப்பார். அல்லது எந்த ஊர்த் திருவிழாவிலோ அந்தப்பாடல் ஒலித்துக்கொண்டிருக்கும்.

  இப்போதிருக்கும் காலச்சூழலில் கூட, அதாவது நம் கூட்டுக்குடும்பங்கள் சிதைந்து, தனித்தனி தீவுகளானபிறகும் கூட, இது போன்றதொரு அனுபவம் நம் வாழ்வில் நடந்து கொண்டேதான் இருக்கிறது.

  இது ஏதோ யதேச்சையாக நடந்தது என்றெல்லாம் சொல்வதற்கில்லை. ஆனால், அது அப்படித்தான் நடந்தது என்று நாம் நம்மை ஆறுதல்படுத்திக்கொள்கிறோம். ஏனெனில், பயம். ஒரு விஷயத்தில் இன்னும் இன்னும் ஆழமாகச்செல்ல பயம். மேலோட்டமாக இருந்து கவனித்து, பிறகு அதைப்பற்றிய நினைவை நம் என்னனத்தில் இருந்து தூக்கிவிடுவது. அல்லது கலைத்துவிடுவது.

  இது போன்ற சம்பங்களை நினைக்கும் பொழுது, அலல்து நடக்கும் பொழுது, நான் அதை மீண்டும் சோதனை செய்துபார்ப்பேன்.

  உதாரணமாக, நான் எப்பொழுது என் கைக்கடிகாரம் அலல்து என்னுடைய அலைபேசியைப் பார்த்தாலும் 05:05 என்றோ, அல்லது 11:11 என்றோ அல்லது 03.33 என்றோ, அல்லது 02:02 என்றோ இப்படியாக இருக்கும்.

  இது ஒரு பெரிய விஷயமாகப்படவில்லை. ஆனால், இதில் என் எண்ணத்தின் அலை இருப்பதாகக்கருதுகிறேன்.

  ஒரு முறை எதேச்சையாக நான் மணி பார்க்கும்பொழுது 10:10 என்று இருந்ததை என் மனம் பதிவு செய்து வைத்துக்கொள்கிறது.
  என் எண்ணத்தை அதன் மீது செலுத்தி, இது போல் அடுத்தமுறையும் நடக்குமா, பார்க்கலாம் என்று அதை சோதனை செய்துபார்க்க மனம் ஏங்குகிறது.

  அதே சமயம், நம் உள்ளுக்குள் இருக்கும் ஆழ்மனதின் ஆசை, எப்போது பார்த்தாலும் இது போன்ற “காம்பினேஷன்” வரவேண்டும் என்று தீவிரமாக இருக்கிறது. அது ஆசைப்படுகிறது. இந்த ஆழமனத்தின் வெளிப்பாடுதான் நான் எப்போது மணி பார்த்தாலும் என் ஆழமான விருப்பப்படி 04:04 என்றோ அலல்து 20:20 என்றோ காண்பிக்கிறது. அதைப்பார்த்ததும் ஆழ்மனது மட்டுமல்ல; நாமும் மகிழ்ச்சி அடைகிறோம்.

  நான் அடைந்தேன். அதைப்பலரிடமும் காண்பித்து, “இதோ பாருங்கள்; நான் எப்பொழுது டைம் பார்த்தாலும் இப்படித்தான் fancy யாக காண்பிக்கிறது” என்று சொல்லி எல்லோரிடமும் நான் காண்பித்துக்கொண்டிருப்பேன்.

  இதில் இன்னொரு உளவியல் பார்வை என்னவாக இருக்கிறது என்றால், இப்படி மணி பார்க்கும்பொழுது, அந்த “காம்பினேஷன்” வரும்பொழுது, ‘நமக்கு நல்லது நடக்கும்’ என்று என் ஆழ்மனதைச்சொல்லச்சொல்கிறேன்.
  ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்பதைப்போல, அதுவும் நான் நினைப்பது போன்றே அந்த மணியைக்காட்டும்.

  இந்த ஆற்றலை, நம் தொழிலில் அல்லது வேலையில் நம் ஆழ்மனதின் சக்தியைப்பெருக்க நாம் உபயோகப்படுத்தவேண்டும். இது சம்பந்தமாக நாம் வேறொரு சந்தர்ப்பத்தில் விரிவாக ஆராய்ந்து பார்த்துப்பேசலாம்.

  ஆக, நாம் எப்படியெல்லாம் நினைக்கிறோமோ, அப்படி எல்லாம் நடக்கும் என்பதற்கான உதாரணங்கள்தான் இவையெல்லாம்.
  நாம் எப்படியெல்லாம் இருக்க ஆசைப்படுகிறோமோ அப்படியெல்லாம் ஆகலாம், நாம் எப்படியெல்லாம் நடக்கவேண்டும் என்று நினைக்கிறோமோ அபப்டியெல்லாம் நடக்கும் தீவிரமாக இருந்தால் ‘ என்பது இது போன்ற சம்பவங்கள் மூலம் உறுதியாக நமக்குப்புலப்படுகிறது.

  நீங்கள் குருவைத்தேடினால்…அது பற்றித் தீவிரமாக இருந்தால்…அந்த வைராக்கியம் இருந்தால்…குரு உங்களைவந்து கண்டடைவார்.

  அப்பொழுது நீங்கள் செய்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். அவரை நம்புவது. உளமார நம்புவது. உறுதியாக நம்புவது. இறுதியாக அவரையே சரணடைவது.

  என் சிற்றறிவுக்கு எட்டியவரை, குருதான் தன மாணவனைத்தேர்ந்தெடுக்கிறார். முதன்மையான மாணவனைத்தேடிதேடி அலைகிறார். இதில் குருவின் பங்கு மிக மகத்தானது.

  யார் சீடனாகத்தகுதியோடு இருக்கிறான் என்பதை சதா சர்வ காலமும் தேடியபடியேதான் இருக்கிறார்.

  ஒரு குருவின் வேலை என்பது இந்த பிரபஞ்ச இயக்கத்தோடு ஒத்திசைவோடு இயங்குவது. இயற்கைக்கு மாறாக எந்தவித துஷ்பிரயோகமும் நடக்காமல் பார்த்துக்கொள்வது அல்லது நடந்தால் அதைக்கண்டிப்போடு எடுத்துரைப்பது. அதைப்போன்ற நல் இதயங்களோடு அப்படிப்பட்ட மனிதர்களோடு உரையாடுவது.

  அவர்களைத் தேடிக்கண்டுபிடித்து தன்னுடனே வைத்துக்கொள்வது. அல்லது சத்சங்கங்கள் நடத்துவது. தன் பணி என்னவாக இருக்கிறது, அதற்கு எப்படிப்பட்ட ஆட்களை வைத்து வேலை வாங்குவது, அந்தக்காரியத்தை தன மனா உறுதியால் எப்படி வென்று முடிப்பது…

  ஒரு குருவின் செயல் என்பது ஒரு பூவைப் பறிக்கும்போதும் அதற்கு வலிக்காமல் அந்தச்செடியில் இருந்து அதைத்தனியே பிரித்தெடுப்பது…

  ஒரு குருவின் அருகாமை உங்களை என்னவெல்லாம் செய்யும்?

  எந்தவிதக்கேள்வியுமில்லாமல் செய்துவிடும் அற்புதக்கணங்களாக ஒவ்வொரு நொடியும் நம்மை மாற்றிவிடும்.

  நம் மேட்டிமைத்தனம், நம் படிப்பு, கர்வம், திமிர், அகங்காரம், கெளரவம், கோபம், ஆத்திரம், பொறாமை,நடிப்பு, – இப்படி எல்லாத்தனித்தனிக்குணங்களும் ஒரே நொடியில் அடித்துவீழ்த்தப்படும் இடம் – இப்படி நடந்தால் குரு உங்கள் எதிரே இருக்கிறார் என்று அர்த்தம்!

  இப்படி ஆகிவிட்டால், நீங்கள் சீடனாக நீங்கள் தயாராகிவிட்டீர்கள் என்று அர்த்தம்.

  குரு என்பவர் உங்களை அடையாளம் கண்டுகொண்டுவிட்டார் என்று அர்த்தம்.
  குருவை நீங்கள் அடையாளம் கண்டுகொள்ளவேண்டிய அவசியம் இல்லை. அவரே உங்களைக்கண்காணிப்பார்.

  நம் பிறப்பு எப்படி இந்தப்பிரபஞ்சத்தால் முடிவு செய்யப்பட்டதோ, அப்படியே குருவிடம் நாம் சென்று சேர்வதும் தன்னிச்சையாக நடக்கும் ஒரு செயலாக ஆகிவிடும்.
  நாம் அதற்கு எந்தவிதக்கோட்பாடுகளும் போட்டுக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை.

  இன்னின்ன முறையை எல்லாம் நாம் கடைப்பிடித்தால்தான் நம்மைத்தேடி குரு வருவார்; நம்மை ஆட்கொள்வார் என்று எந்தவித சஞ்சலமான சிந்தனையும் வேண்டாம்.

  அன்பு ஒன்றே போதுமானது. குருவின் அடைக்கலம் புக, அன்பிற்கு ஈடு இணையில்லை.

  எல்லாம் சரிதான்…குரு சீடனைத்தேடியாயிற்று. சீடன் குருவை அடைந்தாயிற்று.

  இந்த உலகில் “குரு” – ஸ்தூல ரூபமாகத்தான் இருக்கவேண்டுமா? குருவின் அடிப்படை குணங்களாக நாம் என்னென்ன வரையறைகள், கற்பனைகள் வைத்திருக்கிறோம்?

  அவரின் இருப்பிடம் எது? இப்படையெல்லாம் இருந்தால்தான் அவர் குரு என்று ஏதாவது நமக்குள் ஒரு சில எண்ணங்கள் இருக்கின்றனவா?

  உலகில் ஒரே ஒரு குருதான் இருக்கவேண்டுமா?

  நான் சீடனாகிவிட்டேன் என்பதை எப்படிக் கணிப்பது?
  குரு தான் தன் சீடனைத்தேர்ந்தெடுக்கிறார் எனில், அந்த குருவிடம் நான் எப்படி நடந்து கொள்ளவேண்டும்?

  குரு-சீடன் உறவு எப்படி இருக்கும்?

  எல்லாமே மறுபடி கேள்விகளாகவே வந்து முடிகின்றன.

  எல்லாகேள்விகளுக்கும் பதில் இருக்கவேண்டுமல்லவா?

  அதையும் பார்த்துவிடுவோம்!

  நன்றி:
  மகாபெரியவா படம் – ஓவியம்: செந்தில்குமார் அமிர்தலிங்கம்