-
திருப்பதிக்கு இணையான தலம் – Thirupathi
-
Maha Periyava Ashtothram in Tamil
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதீச்வர ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி அஷ்டோத்தரசத நாமாவளி:
- ஓம் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதீச்வராய நம:
- ஓம் ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி குருப்யோ நம:
- ஓம் ஸன்யாஸாச்ரம சிகராய நம:
- ஓம் காஷாய தண்ட தாரிணே நம:
- ஓம் ஸர்வபீடாபஹாரிணே நம:
- ஓம் ஸ்வாமிநாத குரவே நம:
- ஓம் கருணாஸாகராய நம:
- ஓம் ஜகதாகர்ஷண சக்திமதே நம:
- ஓம் ஸர்வ சராசர ஹ்ருதயஸ்தாய நம:
- ஓம் பக்த பரிபாலக ச்ரேஷ்டாய நம:
- ஓம் தர்ம பரிபாலகாய நம:
- ஓம் ஸ்ரீ ஜயேந்த்ர ஸரஸ்வத்யாசார்யாய நம:
- ஓம் ஸ்ரீ விஜயேந்த்ர ஸரஸ்வதி பூஜிதாய நம:
- ஓம் சிவ சக்தி ஸ்வரூபகாய நம:
- ஓம் பக்த ஜன ப்ரியாய நம:
- ஓம் ப்ரம்ம விஷ்ணு சிவைக்ய ஸ்வரூபாய நம:
- ஓம் காஞ்சீ க்ஷேத்ர வாஸாய நம:
- ஓம் கைலாஸ சிகர வாஸாய நம:
- ஓம் ஸ்வதர்ம பரிபோஷ காய நம:
- ஓம் சாதுர் வர்ண்ய ரக்ஷகாய நம:
- ஓம் லோக ரக்ஷித ஸங்கல்பாய நம:
- ஓம் ப்ரஹ்ம நிஷ்டாபராய நம:
- ஓம் ஸர்வ பாப ஹராய நம:
- ஓம் தர்ம ரக்ஷக ஸந்துஷ்டாய நம:
- ஓம் பக்தார்ப்பி்த தன ஸ்வீகர்த்ரே நம:
- ஓம் ஸர்வோபநிஷத் ஸாரஞ்ஞாய நம:
- ஓம் ஸர்வ சாஸ்த்ர கம்யாய நம:
- ஓம் ஸர்வ லோக பிதாமஹாய நம:
- ஓம் பக்தாபீஷ்ட ப்ரதாயகாய நம:
- ஓம் ப்ரம்மண்ய போஷகாய நம:
- ஓம் நானாவித புஷ்பார்ச்சித பதாய நம:
- ஓம் ருத்ராக்ஷ கிரிட தாரிணே நம:
- ஓம் பஸ்மோத் தூளித விக்ரஹாய நம:
- ஓம் ஸர்வக்ஞாய நம:
- ஓம் ஸர்வ சராசர வ்யாபகாய நம:
- ஓம் அநேக சிஷ்ய பரிபாலகாய நம:
- ஓம் மனஸ்சாஞ்சல்ய நிவர்த்தகாய நம:
- ஓம் அபய ஹஸ்தாய நம:
- ஓம் பயாபஹாய நம:
- ஓம் யக்ஞ புருஷாய நம:
- ஓம் யக்ஞாநுஷ்டான ருசிப்ரதாய நம:
- ஓம் யக்ஞ ஸம்பன்னாய நம:
- ஓம் யக்ஞ ஸஹாயகாய நம:
- ஓம் யக்ஞ பலதாய நம:
- ஓம் யக்ஞ ப்ரியாய நம:
- ஓம் உபமான ரஹிதாய நம:
- ஓம் ஸ்படிக துளஸீருத்ராக்ஷ ஹார தாரிணே நம:
- ஓம் சாதுர்வர்ண்ய ஸமத்ருஷ்டயே நம:
- ஓம் ருக் யஜுஸ் ஸாமாதர்வண சதுர்வேத ஸம்ரக்ஷகாய நம:
- ஓம் தக்ஷிணாமூர்த்தி ஸ்வரூபாய நம:
- ஓம் ஜாக்ர ஸ்வப்ன ஸூஷுப்தயவஸ்வாதீதாய நம:
- ஓம் கோடி ஸுர்யதுல்ய தேஜோமயசரீராய நம:
- ஓம் ஸாதுஸங்க ஸம்ரக்ஷகாய நம:
- ஓம் அச்வ கஜ கோ பூஜா நிர்வர்த்தகாய நம:
- ஓம் குருபாதுகா பூஜா துரந்தராய நம:
- ஓம் கனகாபிஷிக்தாய நம:
- ஓம் ஸ்வர்ண பில்வதள பூஜிதாய நம:
- ஓம் ஸர்வ ஜீவ மோக்ஷதாய நம:
- ஓம் மூகவாக்தான நிபுணாய நம:
- ஓம் நேத்ர தீக்ஷாதானாய நம:
- ஓம் த்வாதசலிங்க ஸ்தாபகாய நம:
- ஓம் கான ரஸஞ்ஞாய நம:
- ஓம் ப்ரஹ்ம ஞானோபதேசகாய நம:
- ஓம் ஸகலகலா ஸித்திதாய நம:
- ஓம் சாதுவர்ண்ய பூஜிதாய நம:
- ஓம் அநேகபாஷா ஸம்பாஷண கோவிதாய நம:
- ஓம் அஷ்டஸித்திப்ரதாயகாய நம:
- ஓம் ஸ்ரீ சாரதாமட ஸுஸ்திதாய நம:
- ஓம் நித்தியான்னதான ஸுப்ரீதாய நம:
- ஓம் ப்ரார்த்தனாமாத்ர ஸுலபாய நம:
- ஓம் பாதயாத்ரா ப்ரியாய நம:
- ஓம் நானாவிதமத பண்டிதாய நம:
- ஓம் சுருதி ஸ்ம்ருதி புராணஞ்ஞாய நம:
- ஓம் தேவ யக்ஷ கின்னர கிம்புருஷ பூஜ்யாய நம:
- ஓம் ச்ரவணானந்தகர கீர்த்தயே நம:
- ஓம் தர்சனானந்தாய நம:
- ஓம் அத்வைதானந்த பரிதாய நம:
- ஓம் அவ்யாஜ கருணா மூர்த்தயே நம:
- ஓம் சைவவைஷ்ணவாதி மான்யாய நம:
- ஓம் சங்கராசார்யாய நம:
- ஓம் தண்ட கமண்டலு ஹஸ்தாய நம:
- ஓம் வீணாம்ருதங்காதி ஸகலவாத்யநாத ஸ்வரூபாய நம:
- ஓம் ராமகதா ரஸிகாய நம:
- ஓம் வேத வேதாங்க ஆகமாதி ஸகலகலா ஸதஸ் ப்ரவர்தகாய நம:
- ஓம் ஹ்ருதய குஹாசயாய நம:
- ஓம் சதருத்ரீய வர்ணித ஸ்வரூபாய நம:
- ஓம் கேதாரேஸ்வர நாதாய நம:
- ஓம் அவித்யா நாசகாய நம:
- ஓம் நிஷ்காம கர்மோபதேசகாய நம:
- ஓம் லகுபக்திமார்கோபதேசகாய நம:
- ஓம் லிங்கஸ்வரூபாய நம:
- ஓம் ஸாலக்ராம ஸூக்ஷ்மஸ்வரூபாய நம:
- ஓம் காலட்யாம் சங்கரகீர்த்திஸ்தம்ப நிர்மாண கர்த்ரே நம:
- ஓம் ஜிதேந்த்ரியாய நம:
- ஓம் சரணாகதவத்ஸலாய நம:
- ஓம் ஸ்ரீ சைலசிகரவாஸாய நம:
- ஓம் டம்ரிகநாத விநோதனாய நம:
- ஓம் வ்ருஷபாரூடாய நம:
- ஓம் துர்மதநாசகாய நம:
- ஓம் ஆபிசாரிகதோஷ ஹர்த்ரே நம:
- ஓம் மிதாஹாராய நம:
- ஓம் ம்ருத்யுவிமோசன சக்தாய நம:
- ஓம் ஸ்ரீசக்ரார்ச்சன தத்பராய நம:
- ஓம் தாஸாநுக்ரஹ க்ருதே நம:
- ஓம் அனுராதா நக்ஷத்ர ஜாதாய நம:
- ஓம் ஸர்வலோக க்யாதசீலாய நம:
- ஓம் வேங்கடேச்வர சரணபத்மஷ்டபதாய நம:
- ஓம் ஸ்ரீ த்ரிபுரசுந்தரி ஸமேத ஸ்ரீ சந்திரமௌலீஸ்வர பூஜாப்ரியாய நம:
மஹாஸ்வாமி பாத அஷ்டோத்தர சதநாமாவளி ஸம்பூர்ணம்.
-
எனக்குப்பிடித்த திருத்தலங்கள்- சீனிவாசன் இராமானுஜம் திருத்தலங்கள் டிவி
-
Guru Ashtakam Lyrics in Tamil With Meaning
Guru Ashtakam Lyrics in Tamil With Meaning – குரு அஷ்டகம்
1.சரீரம் ஸுரூபம் ததா கலத்ரம்
யச:சாரு சித்ரம் தனம் மேருதுல்யம்மிமி
மனஸ்சேத் ந லக்னம் குரோரங்க்ரிபத்மே
தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம்
அழகான சரீரம், அழகான மனைவி, பல விதமான புகழ், மேரு மலை போன்ற செல்வம் இவை அனைத்தும் இருந்தாலும் குருவின் கமலப் பாதங்களில் உன் மனம் ஒன்றாவிட்டால் பிறகு என்ன தான் பயன்? என்ன பயன்? என்ன பயன்?
2.கலத்ரம் தனம் புத்ரபௌத்ராதி ஸர்வம்
க்ருஹம் பாந்தவா:ஸர்வ மேதத்ஹிஜாதம் I
மனஸ்சேத் ந லக்னம் குரோரங்க்ரிபத்மே
தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம் II
மனைவி, செல்வம், புத்ரன், பேரன், வீடு, உறவினர்கள், புகழ் வாய்ந்த குடும்பத்தில் பிறப்பு – ஆகியவைகள் அனைத்தும் இருந்தும் குருவின் கமலப் பாதங்களில் உன் மனம் ஒன்றாவிட்டால், பிறகு என்ன பயன்? என்ன பயன்? என்ன பயன்?
3.ஷடங்காதி வேதோ முகே சாஸ்த்ரவித்யா கவித்வாதி கத்யம் ஸுபத்யம் கரோதிமி மனஸ்சேத் ந லக்னம் குரோ ரங்க்ரிபத்மே தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம் II
வேதத்தின் ஆறு பகுதிகளிலும் பாண்டித்தியம், நான்கு வேத இலக்கியம் முழுமையும் கரைகண்ட கல்வி, உயர்ந்த இலக்கிய உரை நடை – கவிதை ஆகியவைகளைப் படைக்கும் திறன் – ஆகியவைகள் அனைத்தும் இருந்தும்,குருவின் கமலப் பாதங்களில் உன் மனம் ஒன்றாவிட்டால் பிறகு என்ன பயன்? என்ன பயன்? என்ன பயன்?
4.விதேசேஷ மான்ய:ஸ்வதேசஷ தன்ய:
ஸதாசார வ்ருத்தேஷ மத்தோ ந சான்ய: I
மனஸ்சேத் ந லக்னம் குரோரங்க்ரிபத்மே
தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம் II
வெளி நாடுகளில் புகழ், சொந்த நாட்டில் பெரும் செல்வம், நல்லொழுக்கம், கீர்த்தி – ஆகியவைகள் அனைத்தும் இருந்தும் குருவின் கமலப் பாதங்களில் உன் மனம் ஒன்றாவிட்டால் பிறகு என்ன பயன்? என்ன பயன்? என்ன பயன்?
5.க்ஷமாமண்டலே பூப பூபாலப்ருந்தை:
ஸதா ஸேவிதம் யஸ்ய பாதாரவிந்தம்மி
மனஸ்சேத் நலக்னம் குரோ ரங்க்ரிபத்மே
தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம் II
இந்தப் பார் முழுவதையும் ஆட்சி செய்யும் அரசர்கள் அனைவரும் உனக்கு சேவை செய்ய உன் பாதங்களில் தவம் கிடந்தாலும், குருவின் கமலப் பாதங்களில் உன் மனம் ஒன்றாவிட்டால் பிறகு என்ன பயன்? என்ன பயன்? என்ன பயன்?
6.யசோ மே கதம் திக்ஷதானப்ரதாபாத்
ஜகத் வஸ்து ஸர்வம் கரே யத்ப்ரஸாதாத்மி
மனஸ்சேத் ந லக்னம் குரோரங்க்ரிபத்மே
தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம் II
உன் கொடைத்திறன் காரணமாக உன் புகழ் திக்கெட்டும் பரவி, இந்த உலகத்தில் எதையும் நீ அடையும் திறன் பெற்றிருந்தாலும் குருவின் கமலப் பாதங்களில் உன் மனம் ஒன்றாவிட்டால்,பிறகு என்ன பயன்? என்ன பயன்? என்ன பயன்?
7.நபோகே நயோகே நவா வாஜிராஜௌ
நகாந்தா முகே நைவ வித்தேஷ சித்தம்வீ
மனஸ்சேத் ந லக்னம் குரோ ரங்க்ரிபத்மே
தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம் II
சுக போகம், ராஜ்யம், மனைவி, குடும்பம், செல்வம் –ஆகியவைகளில் உன் மனம் ஈடுபடாமல் துறவற மனப்பான்மையில் மூழ்கினாலும், குருவின் கமலப் பாதங்களில் உன் மனம் ஒன்றாவிட்டால்,பிறகு என்ன பயன்? என்ன பயன்? என்ன பயன்?
8.அரண்யே ந வா ஸ்வஸ்ய கேஹே ந கார்யே
ந தேஹே மனோ வர்ததே மே த்வநர்க்யேவீ
மனஸ்சேத் ந லக்னம் குரோரங்க்ரிபத்மே
தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம் II
காட்டில் அல்லது வீட்டில் வசித்தாலும், உடலை வருத்திச் செயலில் ஈடுபட்டாலும் அல்லது பெரிய சிந்தனையில் மூழ்கினாலும், குருவின் கமலப் பாதங்களில் உன் மனம் ஒன்றாவிட்டால், பிறகு என்ன பயன்? என்ன பயன்? என்ன பயன்?
9.குரோ ரஷ்டகம் ய:படேத் புண்யதேஹீ
யதிர்பூபதி:ப்ரஹ்மசாரீ ச கேஹீவீ
லபேத் வாஞ்சிதா ர்த்தம் பதம் ப்ரஹ்மஸம்ஜ்ஞம்
குரோருக்தவாக்யே மனோ யஸ்ய லக்னம்மிமி
சந்நியாசியாக இருந்தாலும், அரசராக இருந்தாலும், பிரம்மசாரியாக இருந்தாலும், அல்லது கிருஹஸ்தனாக இருந்தாலும், எவரொருவர் குருவின் மூலம் போதிக்கப்பட்ட இந்த ஸ்லோகங்களை மனத்தில் பதிய வைத்து, பாராயணம் செய்கிறார்களோ அவர்கள் விரும்பியதை அடைவார்கள். பிரம்ம பதவியையும் அடைவார்கள்.
-
Nirvana Shatakam Lyrics in Tamil
நிர்வாண ஷடகம் – பாடல் வரிகள் (Nirvana Shatakam Lyrics in Tamil) மற்றும் பொருள் (Nirvana Shatakam Meaning in Tamil)
மனோ புத்தி அஹங்கார சித்தானி நாஹம்
ந ச ஷ்ரோத்ரஜிஹ்வே ந ச க்ராண நேத்ரே
ந ச வ்யோம பூமிர் ந தேஜோ ந வாயுஹு
சிதானந்த ரூபஹ் ஷிவோஹம் ஷிவோஹம்நான் மனமும் அல்ல, புத்தி, அஹங்காரம் அல்லது சித்தமும் அல்ல,
நான் காதுகளும் அல்ல, தோல், மூக்கு அல்லது கண்களும் அல்ல,
நான் விண்வெளியும் அல்ல, பூமியும் அல்ல, நெருப்பு, நீர் அல்லது காற்றும் அல்ல,
நான் விழிப்புணர்வு மற்றும் பேரின்பத்தின் வடிவம்,
சிவன் நான் சிவமே நான்ந ச ப்ராண சங்யோ ந வை பஞ்ச வாயுஹு
ந வா சப்த தாதுர் ந வா பஞ்ச கோஷ:
ந வாக் பாணி-பாதம் ந சோபஸ்த்த பாயு:
சிதானந்த ரூபஹ் ஷிவோஹம் ஷிவோஹம்நான் பிராணமும் அல்ல, உடலின் ஐந்து வாயுக்களும் அல்ல,
நான் உடலின் ஏழு தாதுக்களும் அல்ல, ஐந்து கோசங்களும் அல்ல
நான் பேச்சிற்கான உறுப்பும் அல்ல, கைகள், கால்கள், பிறப்புறுப்பு அல்லது குதமும் அல்ல
நான் விழிப்புணர்வு மற்றும் பேரின்பத்தின் வடிவம்,
சிவன் நான் சிவமே நான்ந மே த்வேஷ ராகௌ ந மே லோப மோஹௌ
ந மே வை மதோ நைவ மாத் சர்ய பாவஹ
ந தர்மோ ந ச்சார்தோ ந காமோ ந மோக்ஷஹ
சிதாநந்த ரூபஹ் ஷிவோஹம் ஷிவோஹம்என்னுள் வெறுப்பும் விருப்பும் இல்லை, பேராசையும் மதிமயக்கமும் இல்லை
எனக்குள் பெருமை, கர்வம் அல்லது பொறாமை இல்லை,
எனக்கு கடமை இல்லை, செல்வம், காமம் அல்லது விடுதலைக்கான ஆசையும் இல்லை,
நான் விழிப்புணர்வு மற்றும் பேரின்பத்தின் வடிவம்,
சிவன் நான் சிவமே நான்ந புண்யம் ந பாபம் ந சௌக்யம் ந துக்கம்
ந மந்த்ரோ ந தீர்த்தம் ந வேதா ந யக்ஞஹ
அஹம் போஜனம் நைவ போஜ்யம் ந போக்தா
சிதானந்த ரூபஹ் ஷிவோஹம் ஷிவோஹம்எனக்கு நல்வினை தீவினை இல்லை, இன்பம் இல்லை துன்பம் இல்லை,
எனக்கு தேவை மந்திரங்கள் இல்லை, யாத்திரைகள் இல்லை, வேதங்களும் சடங்குகளும் இல்லை,
நான் அனுபவமோ அனுபவிக்கப்பட்டதோ அல்லது அனுபவித்தவனோ அல்ல,
நான் விழிப்புணர்வு மற்றும் பேரின்பத்தின் வடிவம்,
சிவன் நான் சிவமே நான்ந மே ம்ருத்யு ஷங்கா ந மேஜாதி பேதஹ
பிதா நைவ மே நைவ மாதா ந ஜன்மஹ
ந பன்துர் ந மித்ரம் குரூர் நைவ சிஷ்யஹ
சிதானந்த ரூபஹ் ஷிவோஹம் ஷிவோஹம்எனக்கு மரணம் இல்லை மரண பயமும் இல்லை, சாதி, மதம் இல்லை,
எனக்கு தந்தையும் இல்லை, தாயும் இல்லை, ஏனென்றால் நான் பிறந்ததுமில்லை,
நான் உறவினனோ, நண்பனோ, ஆசிரியனோ அல்லது சீடனோ இல்லை
நான் விழிப்புணர்வு மற்றும் பேரின்பத்தின் வடிவம்,
சிவன் நான் சிவமே நான்அஹம் நிர்விகல்போ நிராகாரோ ரூபோ
விபுத் வாட்ச்ச ஸர்வத்ர ஸர்வேந்த்ரியானாம்
ந ச்ச சங்கதம் நைவ முக்திர் ந மேயஹ
சிதானந்த ரூபஹ் ஷிவோஹம் ஷிவோஹம்நான் இருமை இல்லாதவன், என் வடிவம் உருவமற்றது,
நான் எல்லா இடங்களிலும் இருக்கிறேன், எல்லா புலன்களிலும் பரவியிருக்கிறேன்,
நான் பற்றுள்ளவனில்லை, சுதந்திரமாகவோ சிறைபிடிக்கப்பட்டவனாகவோ இல்லை
நான் விழிப்புணர்வு மற்றும் பேரின்பத்தின் வடிவம், சிவன் நான் சிவமே நான் -
எனக்குப்பிடித்த திருத்தலங்கள்!
-
விநாயகர் அகவல்
விநாயகர் அகவல்
சீதக் களபச் செந்தா மரைப்பூம் பாதச் சிலம்பு பலவிசை பாடப் பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும் வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப் பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் (05)
வேழ முகமும் விளங்குசிந் தூரமும் அஞ்சு கரமும் அங்குச பாசமும் நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும் நான்ற வாயும் நாலிரு புயமும் மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் (10)
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும் திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும் சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான அற்புதம் ஈன்ற கற்பகக் களிறே! முப்பழ நுகரும் மூஷிக வாகன! (15)
இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித் தாயா யெனக்குத் தானெழுந் தருளி மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத் திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப் பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து (20)
குருவடி வாகிக் குவலயந் தன்னில் திருவடி வைத்துத் திறமிது பொருளென வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக் கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் (25)
தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம் இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக் கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து) இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து (30)
தலமொரு நான்கும் தந்தெனக் கருளி மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால் ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி ஆறா தாரத்(து) அங்குச நிலையும் (35)
பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக் கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின் நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் (40)
குண்டலி யதனிற் கூடிய அசபை விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக் காலால் எழுப்பும் கருத்தறி வித்தே அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் (45)
குமுத சகாயன் குணத்தையும் கூறி இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும் உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச் சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும் எண் முகமாக இனிதெனக் கருளிப் (50)
புரியட்ட காயம் புலப்பட எனக்குத் தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக் கருத்தினில் கபால வாயில் காட்டி இருத்தி முத்தி யினிதெனக் கருளி என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து (55)
முன்னை வினையின் முதலைக் களைந்து வாக்கும் மனமும் இல்லா மனோலயம் தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து) இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில் (60)
எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து) அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச் சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச் சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க் (65)
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி வேடமும் நீறும் விளங்க நிறுத்திக் கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் (70)
தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட வித்தக விநாயக விரைகழல் சரணே! (72)