-
விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்
விஜயதசமியான இன்று கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை சொல்லி வழிபாடு செய்து வந்தால் அனைத்து செல்வங்களும் கிடைக்கும்:
Vijayadasami அவிச்ராந்தம் பத்யுர் குணகணகதாம் ரேடனஜபா
ஜபாபுஷ்பச் சாயா தவ ஜனனி ஜிஹ்வா ஜயதி ஸா
யதக்ராஸீநாயா ஸ்படிகத்ருஷ தச்சச்சவி மயீஸரஸ்வத்ய மூர்த்தி பரிணமதி மாணிக்யவ புஷா
பொருள் :
அம்பிகையே, உன்னுடைய சிறந்த நாவினால் இடைவிடாமல் உனது கணவனாகிய சிவபெருமானின் பல குணங்களை விளக்கும் கதைகளைப் பேசுவதையே ஜபித்து, அதனால் அது செம்பருத்திப்பூவைப் போல சிவந்து சிறப்புடன் விளங்குகிறது. அந்நாவின் நுனியில் குடியிருக்கும் சரஸ்வதியினுடைய ஸ்படிகம் போன்ற தெளிவான வெண்மை வடிவானது, உன் நா நிறத்தால், மாணிக்கம் போல் சிவந்த வடிவமாக மாறுகிறது. உன் அம்சமான அந்த சரஸ்வதியை வணங்குகிறேன்.
-
கல்வி அறிவு பெருக சரஸ்வதி ஸ்லோகம்
கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை தினமும் 3 முறை மாணவ மாணவியர்கள் பாராயணம்(சொல்லுதல்) செய்து வந்தால் ஞாபக சக்தி அதிகரித்து கல்வி அறிவு பெருகும்.
saraswathi “ஸ்ரீ வித்யாரூபிணி சரஸ்வதி சகலகலாவல்லி
சாரபிம் பாதிரி சாரதாதேவி சாஸ்த்ரவல்லி
வாணி கமலவாணி வாக்தேவி வரநாயகிவீணாபுஸ்தக தாரிணி புஸ்தக ஹஸ்தே
ஸ்ரீ வித்யாலட்சுமி நமோஸ்துதே”இந்த ஸ்லோகத்தை தினமும் 3 முறை மாணவ மாணவியர்கள் பாராயணம்(சொல்லுதல்) செய்து வந்தால் ஞாபக சக்தி அதிகரித்து கல்வி அறிவு பெருகும்.