Naalaayira Divya Prabhandham – Pasuram (64-74)
Naalaayira Divya Prabhandham
நாலாயிர திவ்ய பிரபந்தம்
பெரியாழ்வார் திருவடிகளே சரணம் | ||
உய்யஉலகுபடைத்துண்டமணிவயிறா! ஊழிதோறூழிபலஆலினிலையதன்மேல் * பையஉயோகுதுயில்கொண்டபரம்பரனே! பங்கயநீள்நயனத்துஅஞ்சனமேனியனே! * செய்யவள்நின்னகலம்சேமமெனக்கருதிச் செல்வுபொலிமகரக்காதுதிகழ்ந்திலக * ஐய! எனக்குஒருகால் ஆடுகசெங்கீரை ஆயர்கள்போரேறே! ஆடுகஆடுகவே. (2) |
1 | 64 |
கோளரியின்னுருவங்கொண்டுஅவுணனுடலம் குருதிகுழம்பியெழக்கூருகிரால்குடைவாய்! * மீளஅவன்மகனை மெய்ம்மைகொளக்கருதி மேலையமரர்பதிமிக்குவெகுண்டுவர * காளநன்மேகமவைகல்லொடு கால்பொழியக் கருதிவரைக்குடையாக்காலிகள் காப்பவனே! ஆள! எனக்குஒருகால் ஆடுகசெங்கீரை ஆயர்கள்போரேறே! ஆடுகஆடுகவே. |
2 | 65 |
நம்முடைநாயகனே. நான்மறையின்பொருளே1 நாவியுள்நற்கமலநான்முகனுக்கு * ஒருகால் தம்மனையானவனே! தரணிதலமுழுதும் தாரகையின்னுலகும் தடவிஅதன்புறமும் * விம்மவளர்ந்தவனே! வேழமும்ஏழ்விடையும் விரவியவேலைதனுள்வென்றுவருமவனே! * அம்ம! எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை ஆயர்கள்போரேறே! ஆடுகஆடுகவே. |
3 | 66 |
வானவர்தாம்மகிழவன்சகடமுருள வஞ்சமுலைப்பேயின் நஞ்சமதுஉண்டவனே! * கானகவல்விளவின் காயுதிரக்கருதிக் கன்றதுகொண்டெறியும் கருநிறஎன்கன்றே! * தேனுகனும்முரனும்திண்திறல்வெந்நரகன் என்பவர்தாம்மடியச்செருவதிரச் செல்லும் * ஆனை! எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை ஆயர்கள்போரேறே! ஆடுகஆடுகவே. |
4 | 67 |
மத்தளவும்தயிரும்வார்குழல்நன்மடவார் வைத்தனநெய்களவால்வாரிவிழுங்கி * ஒருங்கு ஒத்தஇணைமருதம் உன்னியவந்தவரை ஊருகரத்தினொடும் உந்தியவெந்திறலோய்! * முத்தினிளமுறுவல் முற்றவருவதன்முன் முன்னமுகத்தணியார் மொய்குழல்களலைய * அத்த! எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை ஆயர்கள்போரேறே! ஆடுகஆடுகவே. |
5 | 68 |
காயமலர்நிறவா! கருமுகில்போலுருவா! கானகமாமடுவில் காளியனுச்சியிலே * தூயநடம்பயிலும் சுந்தரஎன்சிறுவா! துங்கமதக்கரியின் கொம்புபறித்தவனே! * ஆயமறிந்துபொருவான்எதிர்வந்தமல்லை அந்தரமின்றியழித்தாடிய தாளிணையாய்! * ஆய! எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை ஆயர்கள்போரேறே! ஆடுகஆடுகவே. |
6 | 69 |
துப்புடையார்கள்தம்சொல்வழுவாதுஒருகால் தூயகருங்குழல்நல்தோகைமயிலனைய * நப்பினைதன்திறமாநல்விடையேழவிய நல்லதிறலுடையநாதனும்ஆனவனே! * தப்பினபிள்ளைகளைத்தனமிகுசோதிபுகத் தனியொருதேர்கடவித்தாயொடுகூட்டிய * என் அப்ப! எனக்குஒருகால் ஆடுகசெங்கீரை ஆயர்கள்போரேறே! ஆடுகஆடுகவே. |
7 | 70 |
உன்னையும்ஒக்கலையில்கொண்டுதமில்மருவி உன்னொடுதங்கள் கருத்தாயினசெய்துவரும் * கன்னியரும்மகிழக்கண்டவர்கண்குளிரக் கற்றவர்தெற்றிவரப் பெற்றஎனக்குஅருளி * மன்னுகுறுங்குடியாய்! வெள்ளறையாய்! மதிள்சூழ் சோலைமலைக்கரசே! கண்ணபுரத்தமுதே! * என்னவலம்களைவாய்! ஆடுகசெங்கீரை ஏழுலகும்முடையாய்! ஆடுகஆடுகவே. (2) |
8 | 71 |
பாலொடுநெய்தயிர்ஒண்சாந்தொடுசண்பகமும் பங்கயம்நல்லகருப்பூரமும்நாறிவர * கோலநறும்பவளச்செந்துவர்வாயினிடைக் கோமளவெள்ளிமுளைப்போல்சிலபல்லிலக * நீலநிறத்தழகாரைம்படையின் நடுவே நின்கனிவாயமுதம்இற்றுமுறிந்துவிழ * ஏலுமறைப்பொருளே! ஆடுகசெங்கீரை ஏழுலகும்முடையாய்! ஆடுகஆடுகவே. |
9 | 72 |
செங்கமலக்கழலில்சிற்றிதழ்போல்விரலில் சேர்திகழாழிகளும்கிண்கிணியும் * அரையில் தங்கியபொன்வடமும் தாளநன்மாதுளையின் பூவொடுபொன்மணியும் மோதிரமும்கிறியும் * மங்கலஐம்படையும் தோல்வளையும்குழையும் மகரமும்வாளிகளும் சுட்டியும்ஒத்திலக * எங்கள்குடிக்கரசே! ஆடுகசெங்கீரை ஏழுலகும்முடையாய்! ஆடுகஆடுகவே. |
10 | 73 |
அன்னமும்மீனுருவும்ஆளரியும்குறளும் ஆமையுமானவனே! ஆயர்கள்நாயகனே! * என்அவலம்களைவாய்! ஆடுகசெங்கீரை ஏழுலகும்முடையாய்! ஆடுகவாடுகவென்று * அன்னநடைமடவாள்அசோதையுகந்தபரிசு ஆனபுகழ்ப்புதுவைப்பட்டனுரைத்ததமிழ் * இன்னிசைமாலைகள்இப்பத்தும்வல்லார் உலகில் எண்திசையும்புகழ்மிக்குஇன்பமதெய்துவரே. (2) |
11 | 74 |
Total Page Visits: 256 - Today Page Visits: 1