Naalaayira Divya Prabhandham – Pasuram (86-96)
Naallayira Divya Prabhandham
நாலாயிர திவ்ய பிரபந்தம்
பெரியாழ்வார் திருவடிகளே சரணம் | ||
தொடர் சங்கிலிகைசலார்பிலாரென்னத் தூங்குபொன்மணியொலிப்ப * படுமும்மதப்புனல்சோர வாரணம்பையநின்றுஊர்வதுபோல் * உடன்கூடிக்கிண்கிணியாரவாரிப்ப உடைமணிபறைகறங்க * தடந்தாளிணைகொண்டுசார்ங்கபாணி தளர்நடைநடவானோ. (2) |
1 | 86 |
செக்கரிடைநுனிக்கொம்பில்தோன்றும் சிறுபிறைமுளைபோல * நக்கசெந்துவர்வாய்த்திண்ணைமீதே நளிர்வெண்பல்முளையிலக * அக்குவடமுடுத்துஆமைத்தாலிபூண்ட அனந்தசயனன் * தக்கமாமணிவண்ணன்வாசுதேவன் தளர்நடைநடவானோ. |
2 | 87 |
மின்னுக்கொடியும்ஓர்வெண்திங்களும் சூழ்பரிவேடமுமாய் * பின்னல்துலங்கும்அரசிலையும் பீதகச்சிற்றாடையொடும் * மின்னில்பொலிந்ததோர்கார்முகில்போலக் கழுத்திணில்காறையொடும் * தன்னில்பொலிந்தஇருடீகேசன் தளர்நடைநடவானோ. |
3 | 88 |
கன்னற்குடம்திறந்தாலொத்தூறிக் கணகணசிரித்துவந்து * முன்வந்துநின்றுமுத்தம்தரும் என்முகில்வண்ணன்திருமார்வன் * தன்னைப்பெற்றேற்குத்தன்வாயமுதம்தந்து என்னைத்தளிர்ப்பிக்கின்றான் * தன்னெற்றுமாற்றலர்தலைகள்மீதே தளர்நடைநடவானோ. |
4 | 89 |
முன்னலோர்வெள்ளிப்பெருமலைக்குட்டன் மொடுமொடுவிரைந்தோட * பின்னைத்தொடர்ந்ததோர்கருமலைக்குட்டன் பெயர்ந்தடியிடுவதுபோல் * பன்னியுலகம்பரவியோவாப் புகழ்ப்பலதேவனென்னும் * தன்நம்பியோடப்பின்கூடச்செல்வான் தளர்நடைநடவானோ. |
5 | 90 |
ஒருகாலில்சங்குஒருகாலில்சக்கரம் உள்ளடிபொறித்தமைந்த * இருகாலும்கொண்டுஅங்கங்குஎழுதினாற்போல் இலச்சினைபடநடந்து * பெருகாநின்றஇன்பவெள்ளத்தின்மேல் பின்னையும்பெய்துபெய்து * கருகார்க்கடல்வண்ணன்காமர்தாதை தளர்நடைநடவானோ. |
6 | 91 |
படர்பங்கயமலர்வாய்நெகிழப் பனிபடுசிறுதுளிபோல் * இடங்கொண்டசெவ்வாயூறியூறி இற்றிற்றுவீழநின்று * கடுஞ்சேக்கழுத்தின்மணிக்குரல்போல் உடைமணிகணகணென * தடந்தாளினைகொண்டுசார்ங்கபாணி தளர்நடைநடவானோ. |
7 | 92 |
பக்கம்கருஞ்சிறுப்பாறைமீதே அருவிகள்பகர்ந்தனைய * அக்குவடமிழிந்தேறித்தாழ அணியல்குல்புடைபெயர * மக்களுலகினில்பெய்தறியா மணிக்குழவியுருவின் * தக்கமாமணிவண்ணன்வாசுதேவன் தளர்நடைநடவானோ. |
8 | 93 |
வெண்புழுதிமேல்பெய்துகொண்டளைந்ததோர் வேழத்தின்கருங்கன்றுபோல் * தெண்புழுதியாடித்திரிவிக்கிரமன் சிறுபுகர்படவியர்த்து * ஒண்போதலர்கமலச்சிறுக்காலுரைத்து ஒன்றும்நோவாமே * தண்போதுகொண்டதவிசின்மீதே தளர்நடைநடவானோ. |
9 | 94 |
திரைநீர்ச்சந்திரமண்டலம்போல் செங்கண்மால்கேசவன் * தன் திருநீர்முகத்துத்துலங்குசுட்டி திகழ்ந்தெங்கும்புடைபெயர * பெருநீர்த்திரையெழுகங்கையிலும் பெரியதோர்தீர்த்தபலம் தருநீர் * சிறுச்சண்ணம்துள்ளம்சோரத் தளர்நடைநடவானோ. |
10 | 95 |
ஆயர்குலத்தினில்வந்துதோன்றிய அஞ்சனவண்ணன்தன்னை * தாயர்மகிழஒன்னார்தளரத் தளர்நடைநடந்ததனை * வேயர்புகழ்விட்டுசித்தன் சீரால்விரித்தனஉரைக்கவல்லார் * மாயன்மணிவண்ணன்தாள்பணியும் மக்களைப்பெறுவார்களே (2). |
11 | 96 |
Total Page Visits: 1174 - Today Page Visits: 1